• May 06 2024

மதுக் கடைகளுக்கு அனுமதி...! மருந்தகங்களுக்கு அனுமதி இல்லை..!வினோ எம்.பி குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Sep 7th 2023, 2:20 pm
image

Advertisement

வன்னி மாவட்டத்தில் மருந்தகங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்காத அரசு, மதுபானசாலைகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது  தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

இன்று நாட்டில் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வறுமை நிலையிலும் இருக்கின்ற போது எதற்காக மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியது போல, ஆளும் கட்சியினர் இந்த அரசாங்கம் நிலைத்து இருக்கவும் அல்லது ஆளும் கட்சி பிரமுகர்கள் , முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களை தமக்கு ஆதரவாக நிலைத்து இருக்க செய்யவும் அரசாங்கம் தமது சகாக்களுக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிபத்திரங்களை வழங்கி நாட்டை புதைகுழிக்குள் தள்ளுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த போராட்டங்களின் போது பாதிக்கப்பட்ட அமைச்சர்களுக்கும் , ஆளும் கட்சியினருக்கும்  சலுகைகளாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்களை பற்றி சிந்திக்காமல்  இந்த நிலைமையில் தொடர்ந்தும் இருந்தால் இந்த அரசாங்கத்தை மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசாங்கமாக ஏற்று கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுக் கடைகளுக்கு அனுமதி. மருந்தகங்களுக்கு அனுமதி இல்லை.வினோ எம்.பி குற்றச்சாட்டு.samugammedia வன்னி மாவட்டத்தில் மருந்தகங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்காத அரசு, மதுபானசாலைகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது  தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர் , இன்று நாட்டில் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வறுமை நிலையிலும் இருக்கின்ற போது எதற்காக மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியது போல, ஆளும் கட்சியினர் இந்த அரசாங்கம் நிலைத்து இருக்கவும் அல்லது ஆளும் கட்சி பிரமுகர்கள் , முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களை தமக்கு ஆதரவாக நிலைத்து இருக்க செய்யவும் அரசாங்கம் தமது சகாக்களுக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிபத்திரங்களை வழங்கி நாட்டை புதைகுழிக்குள் தள்ளுவதாகவும் தெரிவித்தார்.கடந்த போராட்டங்களின் போது பாதிக்கப்பட்ட அமைச்சர்களுக்கும் , ஆளும் கட்சியினருக்கும்  சலுகைகளாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்களை பற்றி சிந்திக்காமல்  இந்த நிலைமையில் தொடர்ந்தும் இருந்தால் இந்த அரசாங்கத்தை மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசாங்கமாக ஏற்று கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement