• Nov 28 2024

தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து ஓரே அணியாக செயற்படும் முயற்சியைக் கைவிட்டார் மனோ!

Chithra / Oct 2nd 2024, 12:08 pm
image

 

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்து ஓரே அணியாகத் தேர்தலை முகங்கொடுப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி கைவிடப்பட்டுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை மையப்படுத்தி இயங்குகின்ற தமிழ்த் தேசிய கட்சிகள், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் முஸ்லிம்கள் கட்சிகள் என்பன இணைந்து ஒரு அணியாகச் செயற்படுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இதற்கான பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது.

எனினும் அதற்குப் பின்னர் ஏனைய கட்சிகள் அதுதொடர்பான முன்னெடுப்புகள் எதனையும் மேற்கொள்ளாத நிலையில், இந்தத் திட்டத்தைக் கைவிட்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலில் இந்த கட்சிகள் அனைத்தும் புரிந்துணர்வுடன் செயற்பட முயற்சிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து ஓரே அணியாக செயற்படும் முயற்சியைக் கைவிட்டார் மனோ  தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்து ஓரே அணியாகத் தேர்தலை முகங்கொடுப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி கைவிடப்பட்டுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கை மையப்படுத்தி இயங்குகின்ற தமிழ்த் தேசிய கட்சிகள், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் முஸ்லிம்கள் கட்சிகள் என்பன இணைந்து ஒரு அணியாகச் செயற்படுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.இதற்கான பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது.எனினும் அதற்குப் பின்னர் ஏனைய கட்சிகள் அதுதொடர்பான முன்னெடுப்புகள் எதனையும் மேற்கொள்ளாத நிலையில், இந்தத் திட்டத்தைக் கைவிட்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலில் இந்த கட்சிகள் அனைத்தும் புரிந்துணர்வுடன் செயற்பட முயற்சிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement