• May 07 2024

மோட்டார் சைக்கிளில் ஊர்சுற்றும் காதல் ஜோடிகளுக்கு இனி சிக்கல்..!samugammedia

Sharmi / Aug 12th 2023, 4:22 pm
image

Advertisement

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் மேற்கு மூலையில் இருக்கும் மாகாணமான ஆச்சேயில் ஆண் ,பெண் வாகனப் பயணங்கள் தனித்தனியாக அமைய வேண்டும் என்ற உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.

உலகளவில் இஸ்லாமிய மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் ஆச்சேவும் ஒன்று. அதேவேளை மிகவும் கட்டுக்கோப்பான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ள பிராந்தியம் என்ற வகையிலும் ஆச்சேவுக்கு உலகப் பிரபலம் உண்டு.

இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சி நடைபெறும் இந்த மாகாணத்தில்இ தண்டனையாக பொது இடத்தில் வைத்து கசையடிகள் வழங்குவது பல்வேறு  சட்டங்கள் அமுலில் இருக்கின்றன. சூதாட்டம், மது அருந்துவது, திருமணத்துக்கு அப்பாலான உறவு உள்ளிட்டவை இவற்றில் சேரும்.

இந்த வரிசையில் தற்போது திருமணம் மற்றும் குடும்ப உறவுக்குள் வராத ஆண் – பெண் ஆகியோர் ஒன்றாக வாகனப் பயணம் செய்வதற்கான தடையும் சேர்ந்திருக்கிறது.

தங்களது வாகனப் பயணங்களை ஆணும் பெண்ணும் தனித்தனியாகவே மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வாகனங்களில் செல்லும் ஜோடிகளை கட்டுப்படுத்த இயலும் என ஆச்சே மாகாணம் முடிவெடுத்துள்ளது.

இஸ்லாமிய மதகுருக்களின் பரிந்துரை அடிப்படையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


மோட்டார் சைக்கிளில் ஊர்சுற்றும் காதல் ஜோடிகளுக்கு இனி சிக்கல்.samugammedia இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் மேற்கு மூலையில் இருக்கும் மாகாணமான ஆச்சேயில் ஆண் ,பெண் வாகனப் பயணங்கள் தனித்தனியாக அமைய வேண்டும் என்ற உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.உலகளவில் இஸ்லாமிய மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் ஆச்சேவும் ஒன்று. அதேவேளை மிகவும் கட்டுக்கோப்பான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ள பிராந்தியம் என்ற வகையிலும் ஆச்சேவுக்கு உலகப் பிரபலம் உண்டு.இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சி நடைபெறும் இந்த மாகாணத்தில்இ தண்டனையாக பொது இடத்தில் வைத்து கசையடிகள் வழங்குவது பல்வேறு  சட்டங்கள் அமுலில் இருக்கின்றன. சூதாட்டம், மது அருந்துவது, திருமணத்துக்கு அப்பாலான உறவு உள்ளிட்டவை இவற்றில் சேரும்.இந்த வரிசையில் தற்போது திருமணம் மற்றும் குடும்ப உறவுக்குள் வராத ஆண் – பெண் ஆகியோர் ஒன்றாக வாகனப் பயணம் செய்வதற்கான தடையும் சேர்ந்திருக்கிறது. தங்களது வாகனப் பயணங்களை ஆணும் பெண்ணும் தனித்தனியாகவே மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வாகனங்களில் செல்லும் ஜோடிகளை கட்டுப்படுத்த இயலும் என ஆச்சே மாகாணம் முடிவெடுத்துள்ளது.இஸ்லாமிய மதகுருக்களின் பரிந்துரை அடிப்படையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement