• May 07 2024

இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம்....!samugammedia

Sharmi / Oct 9th 2023, 9:43 am
image

Advertisement

இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது எனவும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீன்கள் எல்லாப் பக்கங்களும் செல்லக் கூடியன. மீனவர்கள் மீன்களை பின்தொடர்ந்து சென்று பிடிக்கிறார்கள். பாக்கு நீரிணை ஒரு சிறிய பகுதியாகும்.

இதுபற்றி விரிந்த பேச்சுகள் நடத்துகின்றோம். தற்போது உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. கைதான இந்திய மீனவர்கள் சிலர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிடிக்கப்படும் படகுகளும் விடுவிக்கப்படுகின்றன. வட பகுதியில் சிறந்த மீன்பிடி வளம் உள்ள பகுதியாகும். இந்திய மீனவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவது பற்றி பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டில்லிக்கு விஜயம் செய்திருந்த போதும் பேசப்பட்டது.

இந்த திட்டத்தை பரிசீலிக்க தயாராகவே இருக்கிறோம். இருப்பினும் இந்த இரண்டு தரப்பு மீனவர்களின் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது. ஏனென்றால் இது அரசு தரப்பு சார்ந்த விடயம் மட்டுமல்ல. பிரதானமாக மீனவர்கள் சம்பந்தப்பட்டது. இந்த விவகாரத்தில் இருதரப்பு புரிந்துணர்வு கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம்.samugammedia இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது எனவும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மீன்கள் எல்லாப் பக்கங்களும் செல்லக் கூடியன. மீனவர்கள் மீன்களை பின்தொடர்ந்து சென்று பிடிக்கிறார்கள். பாக்கு நீரிணை ஒரு சிறிய பகுதியாகும். இதுபற்றி விரிந்த பேச்சுகள் நடத்துகின்றோம். தற்போது உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. கைதான இந்திய மீனவர்கள் சிலர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பிடிக்கப்படும் படகுகளும் விடுவிக்கப்படுகின்றன. வட பகுதியில் சிறந்த மீன்பிடி வளம் உள்ள பகுதியாகும். இந்திய மீனவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவது பற்றி பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டில்லிக்கு விஜயம் செய்திருந்த போதும் பேசப்பட்டது.இந்த திட்டத்தை பரிசீலிக்க தயாராகவே இருக்கிறோம். இருப்பினும் இந்த இரண்டு தரப்பு மீனவர்களின் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது. ஏனென்றால் இது அரசு தரப்பு சார்ந்த விடயம் மட்டுமல்ல. பிரதானமாக மீனவர்கள் சம்பந்தப்பட்டது. இந்த விவகாரத்தில் இருதரப்பு புரிந்துணர்வு கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement