• May 07 2024

கஜேந்திரகுமார் எம்.பியின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற பொலிஸார்..! samugammedia

Chithra / Jun 6th 2023, 1:46 pm
image

Advertisement


நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை அவருக்கு வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாட்டை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சி நீதிமன்றில் மருதங்கேணி பொலிஸார் சமர்பித்த விண்ணப்பத்திற்கமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சிங்கள மொழியில் எழுதப்பட்ட தகவலை வழங்குவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிசார் சற்றுமுன்னர் வந்தனர். 

எனக்கு சிங்களம் படிக்கவோ எழுதவோ தெரியாது என்பதால் அதை ஏற்க மறுத்துவிட்டேன். அதைத் தொடர்ந்து அவர்கள் சிங்கள மொழியில் எனக்குப் படித்துக் காட்டினார்கள்.

அதன்படி, ஜூன் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு மருதங்கேணி காவல் நிலையத்தில் என்னை ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர்.

என்னை மருதங்கேணி பொலிஸில் ஆஜர்படுத்தும் வரை எனக்கு வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கிளிநொச்சி நீதவானிடம் பொலிஸார் விண்ணப்பித்ததுடன் நான் பொலிஸ் நிலையத்தில் அறிக்கையிடும் வரை வெளிநாட்டுப் பயணம் தடைசெய்யப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார் – என்றுள்ளது.


கஜேந்திரகுமார் எம்.பியின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற பொலிஸார். samugammedia நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை அவருக்கு வழங்கியுள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாட்டை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.கிளிநொச்சி நீதிமன்றில் மருதங்கேணி பொலிஸார் சமர்பித்த விண்ணப்பத்திற்கமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஇது தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சிங்கள மொழியில் எழுதப்பட்ட தகவலை வழங்குவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிசார் சற்றுமுன்னர் வந்தனர். எனக்கு சிங்களம் படிக்கவோ எழுதவோ தெரியாது என்பதால் அதை ஏற்க மறுத்துவிட்டேன். அதைத் தொடர்ந்து அவர்கள் சிங்கள மொழியில் எனக்குப் படித்துக் காட்டினார்கள்.அதன்படி, ஜூன் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு மருதங்கேணி காவல் நிலையத்தில் என்னை ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர்.என்னை மருதங்கேணி பொலிஸில் ஆஜர்படுத்தும் வரை எனக்கு வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கிளிநொச்சி நீதவானிடம் பொலிஸார் விண்ணப்பித்ததுடன் நான் பொலிஸ் நிலையத்தில் அறிக்கையிடும் வரை வெளிநாட்டுப் பயணம் தடைசெய்யப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார் – என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement