• May 06 2024

கபடத்தனமாக நடிக்கும் ரணில்: சர்வதேசம் உடனடியாக தலையிட வேண்டும்- லவக்குமார் கோரிக்கை!

Sharmi / Jan 16th 2023, 2:27 pm
image

Advertisement

தேசிய பொங்கல் நிகழ்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தை குழப்பும் விதமாக இராணுவத்தினர்,காவற்துறையினர், மற்றும் விசேட அதிரடிப்படையினர் கீழ்த்தரமான செயற்பாட்டை சிவில் சமூகமாக நாம் கண்டிப்பதாக சமூக செயற்பாட்டாளரான லவக்குமார் தெரிவித்தார். 

எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தேசிய பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருக்கும் தருணம் எமக்கான நீதியை கோரி போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

அவர் நல்லிணக்க கொள்கையுடைய ஜனாதிபதியென்றால் எம்முடைய தாய்மார்,பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தை முன்நகர்த்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் சிறீலங்காவிலே வடகிழக்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமாக இருக்கலாம் , காணி அபகரிப்பு விடயமாக இருக்கலாம் எல்லா விடயங்களுக்கும் இராணுவமும் முப்படையினருமே காரணமாக இருக்கின்றனர். 

ஆகவே  இந்த போராட்ட இடத்திலிருந்த இராணுவத்தினர்,காவற்துறையினர், மற்றும் விசேட அதிரடிப்படையினர் கீழ்த்தரமாக நடந்து கொண்ட விதத்தை காணமுடிந்தது. மிலேச்சத்தனமாக தாய்மார் மீதும் மாணவர்ள் மீதும்  தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.

இதை நாங்கள் சிவில் சமூகமாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  நல்லிணக்கக் கொள்கையுடைய ஜனாதிபதி என்று வெளிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு கபடத்தனமாக நடிக்கின்ற ஜனாதிபதியாக இருக்கின்றார். இன்றைய தினம்(15) அதன் வெளிப்படைத் தன்மையை சகல மக்களும் காண முடிந்தது.  மிகவும் மனித உரிமை மீறல் செயலே.இன்று(15) இடம்பெற்றது.

இவ்வாறான செயலை சிறீலங்கா அரசும் ஜனாதிபதியும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதுடன் இவ் விடயங்களில் சர்வதேசம் தலையிட வேண்டும்  என்றார்.

கபடத்தனமாக நடிக்கும் ரணில்: சர்வதேசம் உடனடியாக தலையிட வேண்டும்- லவக்குமார் கோரிக்கை தேசிய பொங்கல் நிகழ்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தை குழப்பும் விதமாக இராணுவத்தினர்,காவற்துறையினர், மற்றும் விசேட அதிரடிப்படையினர் கீழ்த்தரமான செயற்பாட்டை சிவில் சமூகமாக நாம் கண்டிப்பதாக சமூக செயற்பாட்டாளரான லவக்குமார் தெரிவித்தார். எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,தேசிய பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருக்கும் தருணம் எமக்கான நீதியை கோரி போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். அவர் நல்லிணக்க கொள்கையுடைய ஜனாதிபதியென்றால் எம்முடைய தாய்மார்,பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தை முன்நகர்த்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் சிறீலங்காவிலே வடகிழக்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமாக இருக்கலாம் , காணி அபகரிப்பு விடயமாக இருக்கலாம் எல்லா விடயங்களுக்கும் இராணுவமும் முப்படையினருமே காரணமாக இருக்கின்றனர்.  ஆகவே  இந்த போராட்ட இடத்திலிருந்த இராணுவத்தினர்,காவற்துறையினர், மற்றும் விசேட அதிரடிப்படையினர் கீழ்த்தரமாக நடந்து கொண்ட விதத்தை காணமுடிந்தது. மிலேச்சத்தனமாக தாய்மார் மீதும் மாணவர்கள் மீதும்  தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். இதை நாங்கள் சிவில் சமூகமாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  நல்லிணக்கக் கொள்கையுடைய ஜனாதிபதி என்று வெளிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு கபடத்தனமாக நடிக்கின்ற ஜனாதிபதியாக இருக்கின்றார். இன்றைய தினம்(15) அதன் வெளிப்படைத் தன்மையை சகல மக்களும் காண முடிந்தது.  மிகவும் மனித உரிமை மீறல் செயலே.இன்று(15) இடம்பெற்றது. இவ்வாறான செயலை சிறீலங்கா அரசும் ஜனாதிபதியும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதுடன் இவ் விடயங்களில் சர்வதேசம் தலையிட வேண்டும்  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement