• May 05 2024

யாழ்.குருநகர் கடலில் 5 வருடங்களின் பின் இடம்பெற்ற சிலுவைப்பாதை தியானம் SamugamMedia

Chithra / Mar 25th 2023, 8:53 am
image

Advertisement

குருநகர் கடலில் 5 வருடங்களின் பின் திருப்பாடுகளின் சிலுவைப்பாதை தியானம்

நேற்று வெள்ளிக்கிழமை குருநகர் கடலில் நடபெற்றது.

குருநகர் பங்கிலே முதன்முதலில் அருட்பணி ம. இம்மானுவேல் பயஸ் அடிகளாரின் காலத்திலே (1973-1976) கடலில் மின்னொளியில் சிலுவைப்பாதை காட்சிப்படுத்தப்பட்டது.

இரண்டாவது தடவையாக 2018ம் ஆண்டில் குறித்த ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் பெரும் முயற்சியினால் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி இ. இரவிச்சந்திரன் அடிகளாரின் ஆலோசனையில் ஆசிரியர் இக்னேஷியஸ் பிரபா நெறிப்படுத்துதலில் 5 காட்சிகளுடன் கடல் சிலுவைப்பாதை தியானம் காட்சிப்படுத்தப்பட்டது.

மீண்டும்  குருநகர் பங்கு இருதய சபையினரால் பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளாரின் ஆலோசனையில் திருவாளர் ஜெகன் கரண்சனின் நெறிப்படுத்துதலில் நேற்று மாலையில் கடல் சிலுவைப்பாதை தியானம் இடம்பெற்றது.

இத்தியானம் தொடர்மாடி கடற்பரப்பிலிருந்து ரேகடி புனித அந்தோணியார் சிற்றாலய கடற்பரப்பு வரை 7 திருப்பாடுகளின் காட்சி காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இயேசுவின் பாடுகள் உயிரோட்டமாக காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


யாழ்.குருநகர் கடலில் 5 வருடங்களின் பின் இடம்பெற்ற சிலுவைப்பாதை தியானம் SamugamMedia குருநகர் கடலில் 5 வருடங்களின் பின் திருப்பாடுகளின் சிலுவைப்பாதை தியானம்நேற்று வெள்ளிக்கிழமை குருநகர் கடலில் நடபெற்றது.குருநகர் பங்கிலே முதன்முதலில் அருட்பணி ம. இம்மானுவேல் பயஸ் அடிகளாரின் காலத்திலே (1973-1976) கடலில் மின்னொளியில் சிலுவைப்பாதை காட்சிப்படுத்தப்பட்டது.இரண்டாவது தடவையாக 2018ம் ஆண்டில் குறித்த ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் பெரும் முயற்சியினால் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி இ. இரவிச்சந்திரன் அடிகளாரின் ஆலோசனையில் ஆசிரியர் இக்னேஷியஸ் பிரபா நெறிப்படுத்துதலில் 5 காட்சிகளுடன் கடல் சிலுவைப்பாதை தியானம் காட்சிப்படுத்தப்பட்டது.மீண்டும்  குருநகர் பங்கு இருதய சபையினரால் பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளாரின் ஆலோசனையில் திருவாளர் ஜெகன் கரண்சனின் நெறிப்படுத்துதலில் நேற்று மாலையில் கடல் சிலுவைப்பாதை தியானம் இடம்பெற்றது.இத்தியானம் தொடர்மாடி கடற்பரப்பிலிருந்து ரேகடி புனித அந்தோணியார் சிற்றாலய கடற்பரப்பு வரை 7 திருப்பாடுகளின் காட்சி காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.இயேசுவின் பாடுகள் உயிரோட்டமாக காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement