• Nov 24 2024

பொதுபோக்குவரத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்கள் - எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Chithra / Feb 7th 2024, 3:21 pm
image

 

பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்காக பெண் பொலிஸார் மற்றும் சிவில் உடையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட பொலிஸார் அடங்கிய 234 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொதுபோக்குவரத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்கள் - எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை  பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இதற்காக பெண் பொலிஸார் மற்றும் சிவில் உடையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட பொலிஸார் அடங்கிய 234 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement