• May 07 2024

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான சிறப்பு சுற்றறிக்கை! SamugamMedia

Tamil nila / Mar 5th 2023, 8:18 pm
image

Advertisement

இந்த ரமழானின் போது முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.


அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளுக்கு விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்த ரமழான் சீசன் மார்ச் 23 முதல் ஏப்ரல் 21 வரை நடைபெற உள்ளது.



சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதிகாரிகள் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு ரமழான் நிறைவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக முன்பணத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான சிறப்பு சுற்றறிக்கை SamugamMedia இந்த ரமழானின் போது முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளுக்கு விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த ரமழான் சீசன் மார்ச் 23 முதல் ஏப்ரல் 21 வரை நடைபெற உள்ளது.சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதிகாரிகள் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு ரமழான் நிறைவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக முன்பணத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement