• May 05 2024

கடன்பொறியில் சிக்கியிருக்கும் இலங்கை - வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கப்படும் நாட்டின் காணிகள், நிறுவனங்கள்..! ஜே.வி.பி. அதிர்ச்சி தகவல் samugammedia

Chithra / Jul 1st 2023, 4:52 pm
image

Advertisement

இலங்கையின் கடனை தீர்க்க நாட்டிலுள்ள காணிகள், நிறுவனங்களை சீனா,  அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு வழங்கும் நிலைக்கு இந்த அரசாங்கம் இறங்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தற்போது கடன்பொறியில் சிக்கியிருக்கின்ற நிலையிலுள்ளனர். இதற்கு  மக்கள் பொறுப்புக் கூற முடியாது.  கடந்த 70 வருட ஆட்சியாளர்களும் ராஜபக்சாக்களும் பொறுப்பு கூற வேண்டும்.

ரணில் ராஜபக்சாக்களைப் பாதுகாப்பதற்கு நடந்துகொள்வதன் வெளிப்பாடுகளே  இவையாகும்.

2010 ம் ஆண்டு அந்நியச் செலாவனியானது 7396 மில்லியன் டொலராகக் காணப்பட்டதுடன் 1837 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. வங்கிகளை மூடியதற்கு உள்நாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வதற்கேயாகும்.

சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கியிருக்கும் கடன் அபரிமிதமாகக் காணப்படுவதால் கடனை மறுசீரமைப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்தால்  வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமாயின் உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென சர்வதேச நாணய  நிதியம் கூறியுள்ளது.

நாட்டின்  அந்நியச் செல்வனியானது 7196 மில்லியன் டொலராக 2010 ம் ஆண்டு காணப்பட்டது. தற்போது 1897 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. இதற்கான காரணத்தை தேடிப் பார்க்கையில் நாடு  தற்போது வெளிநாட்டு வருகையை இழந்தமையை அவதானிக்க முடியும்.

தேயிலை ஏற்றுமதி, உல்லாசப் பயணத்துறை மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் போன்றவை  பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு 4082 மில்லியன் டொலர் தனிநபர் வருமானமாக காணப்பட்டதுடன், தற்போது 3471 ஆக குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது

கடந்த 2019 ம் ஆண்டு மொத்த தேசிய  உற்பத்தியானது 15810 மில்லியன் டொலராகக் காணப்பட்டதுடன் தற்போது  ஏற்றுமதி மூலம்  24141 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எது எவ்வாறாினும் நாட்டின் உற்பத்தி அதிகரித்தாலும் நாட்டின் டொலர் அதிகரித்தததால் இது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.

மொத்த தேசிய ற்பத்தியானது 2019 ம் ஆண்டு 88989 டொலராக காணப்பட்டதுடன்  77060 டொலராக குறைந்துள்ளது. இவ்வாறான நெருக்கடியால் அனைத்து துறைகளும் பாரிய நெருக்கடியை நோக்கி நகர்கின்றது.

2490 பில்லியன் டொலரை கடந்த ஓகஸ்ட் திருப்ப செலுத்த வேண்டிய நிலையில் திரும்பச் செலுத்த முடியாது என்று அறிவித்ததிலிருந்து இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்தது.

கடந்த காலங்களிலுள்ள வரிசை குறைந்துவிட்டதால் ரணில் ராஜபக்சா வல்லவர் என்ற கருத்து மக்கள் மத்தியிலுள்ளது. 5.2 மில்லியன் டொலர் வாங்கிய கடனுக்கு செலுத்தும் வட்டியாகவுள்ளது. இந்த ஓகஸ்டுக்கு பிறகு இதை திருப்பி செலுத்த வேண்டும்.

இதனை தீர்க்க நாட்டிலுள்ள காணிகள் போன்றவற்றை சீனா  அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு வழங்கும் நிலைக்கு இந்த அரசாங்கம் இறங்கியுள்ளது.

இலங்கை காப்புறுதித் திணைக்களம், பெற்றோலியக் கூட்டுதாபனம் போன்றவை தனியாருக்கு தாரைவார்க்கப்படவுள்ளது.

குறித்த நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களாகும். அவற்றை தாரை வார்த்து கடன் மறுசீரமைப்பு செய்யும் நிலைக்கு முற்படுகின்றனர்.

இந்த நாட்டை கடன்பட்டு திவாலான நிலைக்கு மாற்றியது கேடுகெட்ட பரதேசிகளின் நிலையாலாகும். 

ரணில் 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது 1400 கோடி ரூபா பிணைமுறி மோசடி செய்தார்.  அதனை செய்தவர் அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் அர்ஜீன மகேந்திரன் தற்போது நாட்டை விட்டு ஓடியிருந்தாலும் அவரை கைது செய்ய நிறைவேற்று அதிார ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்காவால் முடியவில்லை.

இதைவிட கோட்டாபய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீனி மோசடி, தாமரைக் கோபுரத்தினூடாக 200 மில்லியன் ரூபா மோசடியிலுள்ளதாக யாழ்ப்பாணத்தில் மைத்திரி குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ஊழல் மேற்கொள்ளப்பட்ட பணங்கள் மீளக்கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதைவிட கட்டுநாயக்கா விமான நிலையம், அம்பாந்தோட்டை  துறைமுகம் மற்றும் காப்பெற் வீதி நிர்மாணங்களின் போது பல கோடி பெறுமதியான பணம் சூறையாடப்பட்டுள்ளது.

அஸ்வெஸ்ம என்ற நிகழ்ச்சி நிரலானது வறுமையில் வாடுகின்ற மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையாகும்.

32  இலட்சம் சமுர்த்திப் பயனாளிகளாகக் காணப்பட்ட நிலையில் தற்போது  அத் தொகையை 20 இலட்சமாகக் குறைக்கவுள்ளனர்.

மலையக மக்கள் இன்னல்படும் தருணம் எங்களுடைய ஜனாதிபதி என  அரசியல்வாதிகள் கொண்டாடுகின்றனர்.

200 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் மலையக மக்கள் வாழ்வை அழிக்கும் முறை காணப்படுகின்றது.  எனவே அஸ்வெஸ்ம என்ற மக்கள் நலன் திட்டத்தை மக்களுக்கு தீமை ஏற்படும் விதத்தில் உபயோகிக்கும் அரசின் நடவடிக்கையை மக்கள் விடுதலை முன்னணி கண்டிக்கின்றது. என்றார்.

கடன்பொறியில் சிக்கியிருக்கும் இலங்கை - வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கப்படும் நாட்டின் காணிகள், நிறுவனங்கள். ஜே.வி.பி. அதிர்ச்சி தகவல் samugammedia இலங்கையின் கடனை தீர்க்க நாட்டிலுள்ள காணிகள், நிறுவனங்களை சீனா,  அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு வழங்கும் நிலைக்கு இந்த அரசாங்கம் இறங்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கை தற்போது கடன்பொறியில் சிக்கியிருக்கின்ற நிலையிலுள்ளனர். இதற்கு  மக்கள் பொறுப்புக் கூற முடியாது.  கடந்த 70 வருட ஆட்சியாளர்களும் ராஜபக்சாக்களும் பொறுப்பு கூற வேண்டும்.ரணில் ராஜபக்சாக்களைப் பாதுகாப்பதற்கு நடந்துகொள்வதன் வெளிப்பாடுகளே  இவையாகும்.2010 ம் ஆண்டு அந்நியச் செலாவனியானது 7396 மில்லியன் டொலராகக் காணப்பட்டதுடன் 1837 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. வங்கிகளை மூடியதற்கு உள்நாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வதற்கேயாகும்.சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கியிருக்கும் கடன் அபரிமிதமாகக் காணப்படுவதால் கடனை மறுசீரமைப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்தால்  வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமாயின் உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென சர்வதேச நாணய  நிதியம் கூறியுள்ளது.நாட்டின்  அந்நியச் செல்வனியானது 7196 மில்லியன் டொலராக 2010 ம் ஆண்டு காணப்பட்டது. தற்போது 1897 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. இதற்கான காரணத்தை தேடிப் பார்க்கையில் நாடு  தற்போது வெளிநாட்டு வருகையை இழந்தமையை அவதானிக்க முடியும்.தேயிலை ஏற்றுமதி, உல்லாசப் பயணத்துறை மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் போன்றவை  பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு 4082 மில்லியன் டொலர் தனிநபர் வருமானமாக காணப்பட்டதுடன், தற்போது 3471 ஆக குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றதுகடந்த 2019 ம் ஆண்டு மொத்த தேசிய  உற்பத்தியானது 15810 மில்லியன் டொலராகக் காணப்பட்டதுடன் தற்போது  ஏற்றுமதி மூலம்  24141 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.எது எவ்வாறாினும் நாட்டின் உற்பத்தி அதிகரித்தாலும் நாட்டின் டொலர் அதிகரித்தததால் இது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.மொத்த தேசிய ற்பத்தியானது 2019 ம் ஆண்டு 88989 டொலராக காணப்பட்டதுடன்  77060 டொலராக குறைந்துள்ளது. இவ்வாறான நெருக்கடியால் அனைத்து துறைகளும் பாரிய நெருக்கடியை நோக்கி நகர்கின்றது.2490 பில்லியன் டொலரை கடந்த ஓகஸ்ட் திருப்ப செலுத்த வேண்டிய நிலையில் திரும்பச் செலுத்த முடியாது என்று அறிவித்ததிலிருந்து இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்தது.கடந்த காலங்களிலுள்ள வரிசை குறைந்துவிட்டதால் ரணில் ராஜபக்சா வல்லவர் என்ற கருத்து மக்கள் மத்தியிலுள்ளது. 5.2 மில்லியன் டொலர் வாங்கிய கடனுக்கு செலுத்தும் வட்டியாகவுள்ளது. இந்த ஓகஸ்டுக்கு பிறகு இதை திருப்பி செலுத்த வேண்டும்.இதனை தீர்க்க நாட்டிலுள்ள காணிகள் போன்றவற்றை சீனா  அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு வழங்கும் நிலைக்கு இந்த அரசாங்கம் இறங்கியுள்ளது.இலங்கை காப்புறுதித் திணைக்களம், பெற்றோலியக் கூட்டுதாபனம் போன்றவை தனியாருக்கு தாரைவார்க்கப்படவுள்ளது.குறித்த நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களாகும். அவற்றை தாரை வார்த்து கடன் மறுசீரமைப்பு செய்யும் நிலைக்கு முற்படுகின்றனர்.இந்த நாட்டை கடன்பட்டு திவாலான நிலைக்கு மாற்றியது கேடுகெட்ட பரதேசிகளின் நிலையாலாகும். ரணில் 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது 1400 கோடி ரூபா பிணைமுறி மோசடி செய்தார்.  அதனை செய்தவர் அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் அர்ஜீன மகேந்திரன் தற்போது நாட்டை விட்டு ஓடியிருந்தாலும் அவரை கைது செய்ய நிறைவேற்று அதிார ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்காவால் முடியவில்லை.இதைவிட கோட்டாபய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீனி மோசடி, தாமரைக் கோபுரத்தினூடாக 200 மில்லியன் ரூபா மோசடியிலுள்ளதாக யாழ்ப்பாணத்தில் மைத்திரி குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ஊழல் மேற்கொள்ளப்பட்ட பணங்கள் மீளக்கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இதைவிட கட்டுநாயக்கா விமான நிலையம், அம்பாந்தோட்டை  துறைமுகம் மற்றும் காப்பெற் வீதி நிர்மாணங்களின் போது பல கோடி பெறுமதியான பணம் சூறையாடப்பட்டுள்ளது.அஸ்வெஸ்ம என்ற நிகழ்ச்சி நிரலானது வறுமையில் வாடுகின்ற மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையாகும்.32  இலட்சம் சமுர்த்திப் பயனாளிகளாகக் காணப்பட்ட நிலையில் தற்போது  அத் தொகையை 20 இலட்சமாகக் குறைக்கவுள்ளனர்.மலையக மக்கள் இன்னல்படும் தருணம் எங்களுடைய ஜனாதிபதி என  அரசியல்வாதிகள் கொண்டாடுகின்றனர்.200 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் மலையக மக்கள் வாழ்வை அழிக்கும் முறை காணப்படுகின்றது.  எனவே அஸ்வெஸ்ம என்ற மக்கள் நலன் திட்டத்தை மக்களுக்கு தீமை ஏற்படும் விதத்தில் உபயோகிக்கும் அரசின் நடவடிக்கையை மக்கள் விடுதலை முன்னணி கண்டிக்கின்றது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement