• May 06 2024

பாராளுமன்றில் இரட்டை வேடம் போடும் தமிழ் தேசிய எம்.பிக்கள்...! கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு...! samugammedia

Sharmi / Nov 23rd 2023, 8:27 am
image

Advertisement

வரவு, செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில்  சில தமிழ் எம்பிக்கள் பங்கேற்காமையானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெள்ளையடிக்கின்ற செயற்பாடாகவே உள்ளதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு, செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 

இந்த வாக்கெடுப்பில் எமது கட்சியும், சுமந்திரனும், சாணக்கியனும் மட்டுமே வாக்களித்திருந்தோம். 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தினை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். அதற்கு அவர்களின் உரைகள் சான்றுகளாக உள்ளன. குறிப்பாக, ஏனைய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். சி.வி.விக்னேஸ்வரன் மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

ஆனால், அவர்கள் யாரும் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. நாடாளுமன்றத்திற்கு சமுகமளித்தவர்கள் கூட வாக்கெடுப்பு நேரத்தில் அங்கிருந்து வெளியேறியிருந்தர்கள்.

ஆகவே, இந்தச் செயற்பாடானது அவர்களின் இரட்டை வேடத்தினைக் காண்பிக்கிறது. அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெள்ளையடிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இரட்டை வேடம் போடும் தமிழ் தேசிய எம்.பிக்கள். கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு. samugammedia வரவு, செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில்  சில தமிழ் எம்பிக்கள் பங்கேற்காமையானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெள்ளையடிக்கின்ற செயற்பாடாகவே உள்ளதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு, செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் எமது கட்சியும், சுமந்திரனும், சாணக்கியனும் மட்டுமே வாக்களித்திருந்தோம். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தினை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். அதற்கு அவர்களின் உரைகள் சான்றுகளாக உள்ளன. குறிப்பாக, ஏனைய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். சி.வி.விக்னேஸ்வரன் மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.ஆனால், அவர்கள் யாரும் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. நாடாளுமன்றத்திற்கு சமுகமளித்தவர்கள் கூட வாக்கெடுப்பு நேரத்தில் அங்கிருந்து வெளியேறியிருந்தர்கள்.ஆகவே, இந்தச் செயற்பாடானது அவர்களின் இரட்டை வேடத்தினைக் காண்பிக்கிறது. அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெள்ளையடிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement