• May 06 2024

ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை...! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு...!

Sharmi / Apr 4th 2024, 12:52 pm
image

Advertisement

பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் மீது தண்டனை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிவித்தலில்,

கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களை வளப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, மாணவர்களை அடித்து, துன்புறுத்தி வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. 

கடந்த சில மாதங்களுக்குள் இவ்வாறாக செயற்பட்ட ஆசிரியர்கள் தொடர்பில், ஆளுநர் செயலகத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

நேற்றையதினம் பதிவாகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“எழுத்தறிவித்தவன் இறைவன்” எனும் கூற்றுக்கு அமைய, இறைவனாக போற்றப்படக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் துன்பம் இழைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

கற்றலில் சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்களை எவ்வாறு கற்றலில் ஈடுபடச் செய்வது என்ற யுக்தியை கண்டறிந்து அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. வடக்கு ஆளுநர் தெரிவிப்பு. பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் மீது தண்டனை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.குறித்த அறிவித்தலில்,கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களை வளப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, மாணவர்களை அடித்து, துன்புறுத்தி வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்குள் இவ்வாறாக செயற்பட்ட ஆசிரியர்கள் தொடர்பில், ஆளுநர் செயலகத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் பதிவாகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.“எழுத்தறிவித்தவன் இறைவன்” எனும் கூற்றுக்கு அமைய, இறைவனாக போற்றப்படக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் துன்பம் இழைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.கற்றலில் சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்களை எவ்வாறு கற்றலில் ஈடுபடச் செய்வது என்ற யுக்தியை கண்டறிந்து அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement