• Jul 01 2024

உக்ரைனுக்கு 45 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கிய முக்கிய நாடு! SamugamMedia

Sharmi / Feb 21st 2023, 9:31 am
image

Advertisement

உக்ரைனுக்கு ரூ.45 ஆயிரம் கோடி நிதியுதவியை ஜப்பான் அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளதையொட்டி உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.45 ஆயிரத்து 487 கோடி) நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பங்கேற்று பேசியபோது இதுப்பற்றி அவர் கூறுகையில், "உக்ரைன் இன்னும் ரஷிய படையெடுப்பின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷிய தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு உதவி தேவை.

எனவே உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது.

மேலும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்வதை குறிக்கும் வகையில் 24-ந் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்புடன் ஜி-7 மாநட்டை நடத்த முடிவு செய்துள்ளேன்" என கூறினார். 

உக்ரைனுக்கு 45 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கிய முக்கிய நாடு SamugamMedia உக்ரைனுக்கு ரூ.45 ஆயிரம் கோடி நிதியுதவியை ஜப்பான் அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளதையொட்டி உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.45 ஆயிரத்து 487 கோடி) நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பங்கேற்று பேசியபோது இதுப்பற்றி அவர் கூறுகையில், "உக்ரைன் இன்னும் ரஷிய படையெடுப்பின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷிய தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு உதவி தேவை.எனவே உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது. மேலும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்வதை குறிக்கும் வகையில் 24-ந் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்புடன் ஜி-7 மாநட்டை நடத்த முடிவு செய்துள்ளேன்" என கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement