• May 05 2024

ஒரு டம்ளர் ஓம நீரை தினமும் காலையில் குடிப்பதால் நிகழும் அற்புதங்கள்!

Chithra / Jan 2nd 2023, 10:43 pm
image

Advertisement

ஓமம் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றது.

அதில் செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரி செய்வது வரை பல நன்மைகளை சரி செய்வதாக மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓம நீரை எப்படி செய்வது ? 


25 கிராம் ஓம விதைகளை முதல் நாள் இரவே ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த விதைகளை ஸ்பூன் கொண்டு லேசாக நசுக்கி விட்டு, பின் வடிகட்ட வேண்டும்.

பின் வேண்டுமானால் சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம்.  பின்பு அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

ஓம நீரை குடிப்பதால் எற்படும் நன்மைகள்


1. தொப்பையை குறைக்க ஓம நீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து பாருங்கள். நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

2. உடலின் மெட்டபாலிச செயல்முறை அதிகரிக்கும். இதனால் மலச்சிக்கல் மிற்றும் உடல் பருமன் பிரச்சனையையும் தடுக்கிறது. 

3. ஓம நீரை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது குடலில் உள்ள நொதிகளை செயல்படத் தூண்டிவிட்டு, செரிமான பிரச்சினைகள் மற்றும் அசிடிட்டி பிரச்சனைளை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

4. உங்களுக்கு சுவாச பிரச்சினைகள் இருந்தால், ஓம நீரை தினமும் குடித்து வரலாம்.

உங்களுக்கு சருமத்தில் கொப்புளங்கள் மற்றும் அரிப்புகள் அதிகமாக இருந்தால், அந்த இடத்தில் ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து தடவுங்கள். இதனால் அரிப்புக்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஒரு டம்ளர் ஓம நீரை தினமும் காலையில் குடிப்பதால் நிகழும் அற்புதங்கள் ஓமம் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றது.அதில் செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரி செய்வது வரை பல நன்மைகளை சரி செய்வதாக மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓம நீரை எப்படி செய்வது  25 கிராம் ஓம விதைகளை முதல் நாள் இரவே ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த விதைகளை ஸ்பூன் கொண்டு லேசாக நசுக்கி விட்டு, பின் வடிகட்ட வேண்டும்.பின் வேண்டுமானால் சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம்.  பின்பு அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.ஓம நீரை குடிப்பதால் எற்படும் நன்மைகள்1. தொப்பையை குறைக்க ஓம நீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து பாருங்கள். நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.2. உடலின் மெட்டபாலிச செயல்முறை அதிகரிக்கும். இதனால் மலச்சிக்கல் மிற்றும் உடல் பருமன் பிரச்சனையையும் தடுக்கிறது. 3. ஓம நீரை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது குடலில் உள்ள நொதிகளை செயல்படத் தூண்டிவிட்டு, செரிமான பிரச்சினைகள் மற்றும் அசிடிட்டி பிரச்சனைளை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 4. உங்களுக்கு சுவாச பிரச்சினைகள் இருந்தால், ஓம நீரை தினமும் குடித்து வரலாம்.உங்களுக்கு சருமத்தில் கொப்புளங்கள் மற்றும் அரிப்புகள் அதிகமாக இருந்தால், அந்த இடத்தில் ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து தடவுங்கள். இதனால் அரிப்புக்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Advertisement

Advertisement

Advertisement