• May 05 2024

திருகோணமலையில் நீதி அமைச்சர் தலைமையில் நாளை நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வு! samugammedia

Chithra / May 25th 2023, 6:07 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்ட செயலகம் , நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தனிநபர்களின் சட்ட ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பது மற்றும் வேறு சட்ட உதவிகளை வழங்குவதற்குமான நடமாடும் சேவையானது நாளை காலை 9.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பங்குபற்றலுடன் நடைபெறும் இந் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இந்தியாவிலிருந்து வருகை தந்து மீண்டும் குடியிருக்கும் இலங்கை அகதிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்காகக் கொண்டு இந்நடமாடும் சேவை நடாத்தப்படவுள்ளதுடன் ஏனையவர்களும் இந்நாடமாடும் சேவையில் பல சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம், குடி வரவு குடியகல்வுத் திணைக்களம், தலைமைப் பதிவாளர் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம்,

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம், 

மத்தியஸ்த சபை ஆணைக்குழு மற்றும் சட்ட சபை ஆணைக்குழு ஆகிய நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கின்றன.


திருகோணமலையில் நீதி அமைச்சர் தலைமையில் நாளை நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வு samugammedia திருகோணமலை மாவட்ட செயலகம் , நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தனிநபர்களின் சட்ட ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பது மற்றும் வேறு சட்ட உதவிகளை வழங்குவதற்குமான நடமாடும் சேவையானது நாளை காலை 9.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி சட்டத்தரணி நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பங்குபற்றலுடன் நடைபெறும் இந் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.இந்தியாவிலிருந்து வருகை தந்து மீண்டும் குடியிருக்கும் இலங்கை அகதிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்காகக் கொண்டு இந்நடமாடும் சேவை நடாத்தப்படவுள்ளதுடன் ஏனையவர்களும் இந்நாடமாடும் சேவையில் பல சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம், குடி வரவு குடியகல்வுத் திணைக்களம், தலைமைப் பதிவாளர் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம்,காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம், மத்தியஸ்த சபை ஆணைக்குழு மற்றும் சட்ட சபை ஆணைக்குழு ஆகிய நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement