• May 05 2024

சம்பந்தன், சுமந்திரனுடனான பேச்சு உத்தியோகபூர்வமற்றதாம்! – ஜனாதிபதி செயலகம்

Chithra / Dec 23rd 2022, 6:50 am
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடனான சந்திப்பு உத்தியோக பூர்வமற்றது என ஜனாதிபதி செயலகத்தினால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில்(21) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோர் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பினை ஒத்திவைக்குமாறு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஊடாக ஜனாதிபதியிடம் கோரி இருந்தார்.

குறித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் முகமாக சி.வி விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்த சந்திப்பு உத்தியோகபூர்வமற்றது. 

எதிர்காலத்தில் அடுத்த சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பந்தன், சுமந்திரனுடனான பேச்சு உத்தியோகபூர்வமற்றதாம் – ஜனாதிபதி செயலகம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடனான சந்திப்பு உத்தியோக பூர்வமற்றது என ஜனாதிபதி செயலகத்தினால்  அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலகத்தில்(21) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோர் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.குறித்த சந்திப்பினை ஒத்திவைக்குமாறு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஊடாக ஜனாதிபதியிடம் கோரி இருந்தார்.குறித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் முகமாக சி.வி விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்த சந்திப்பு உத்தியோகபூர்வமற்றது. எதிர்காலத்தில் அடுத்த சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement