• May 06 2024

புத்தளத்தில் இளைஞன் சடலமாக மீட்பு...!samugammedia

Sharmi / Nov 28th 2023, 3:25 pm
image

Advertisement

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்தின் வீதியோரத்தில் இனந்தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட  இளைஞன் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை எனவும்  சுமார் 36 வயது மதிக்கதக்க ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி பொலிஸாருக்கு இன்று காலை 6.30 மணியளவில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றதுடன், முதற்கட்ட விசாரனைகளையும் மேற்கொண்டனர்.

இதன்போது புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல்  பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரனைகளை மேற்கொண்டனர்.

மேலும், பொலிஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்க முடியும் எனவும் கூறினர்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் , சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.






புத்தளத்தில் இளைஞன் சடலமாக மீட்பு.samugammedia மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்தின் வீதியோரத்தில் இனந்தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்ட  இளைஞன் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை எனவும்  சுமார் 36 வயது மதிக்கதக்க ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.மதுரங்குளி பொலிஸாருக்கு இன்று காலை 6.30 மணியளவில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றதுடன், முதற்கட்ட விசாரனைகளையும் மேற்கொண்டனர்.இதன்போது புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல்  பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரனைகளை மேற்கொண்டனர்.மேலும், பொலிஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.இது ஒரு கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்க முடியும் எனவும் கூறினர்.அத்துடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் , சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement