• May 20 2024

AI தொழில்நுட்பம் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் 1990 அம்புலன்ஸ் சேவை!

Chithra / Dec 13th 2023, 4:40 pm
image

Advertisement

 

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் நவீன முறையில் 1990 சுவ சரியா அம்புலன்ஸ் சேவை இடம்பெறவுள்ளது.

1990 சுவ சரியா, இலங்கையின் இலவச அம்புலன்ஸ் சேவையானது, கலப்பு யதார்த்தம் (Mixed Reality) மற்றும் செயற்கைத் தொழில்நுட்பம் (Artificial technology) ஆகியவற்றைப் பயன்படுத்தி அம்புலன்ஸ் மற்றும் மருத்துவரை ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் அம்புலன்ஸ் சேவையாக மாறியுள்ளது.

‘இணைக்கப்பட்ட அம்புலன்ஸ்’, உயிர்களைக் காப்பாற்றும் சுவ சரியாவின் பணியை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவ சரியாவின் தொழிநுட்ப ஒருங்கிணைப்பு முன்னோடி திட்டமாக முதலில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுவ சரிய ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக 10,000 ரூபா வழங்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார்.


AI தொழில்நுட்பம் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் 1990 அம்புலன்ஸ் சேவை  AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் நவீன முறையில் 1990 சுவ சரியா அம்புலன்ஸ் சேவை இடம்பெறவுள்ளது.1990 சுவ சரியா, இலங்கையின் இலவச அம்புலன்ஸ் சேவையானது, கலப்பு யதார்த்தம் (Mixed Reality) மற்றும் செயற்கைத் தொழில்நுட்பம் (Artificial technology) ஆகியவற்றைப் பயன்படுத்தி அம்புலன்ஸ் மற்றும் மருத்துவரை ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் அம்புலன்ஸ் சேவையாக மாறியுள்ளது.‘இணைக்கப்பட்ட அம்புலன்ஸ்’, உயிர்களைக் காப்பாற்றும் சுவ சரியாவின் பணியை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சுவ சரியாவின் தொழிநுட்ப ஒருங்கிணைப்பு முன்னோடி திட்டமாக முதலில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.இதேவேளை சுவ சரிய ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக 10,000 ரூபா வழங்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement