• May 06 2024

2000 ஆடைத் தொழிற்சாலைகளுக்கு பூட்டு..! வேறு வழிகளில் பணத்தைத் தேடும் வேலையிழந்த பெண்கள்..! சஜித் அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Nov 30th 2023, 3:20 pm
image

Advertisement


ஆடைத் துறையில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பெரும்பாலான பெண்கள் வேலை இழந்துள்ளனர் என்றும், இதனால் அவர்களது குடும்ப நலன் நடவடிக்கைகள் கூட முடங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை 2000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு 533,858 பேர் வேலை இழந்துள்ளனர், 

20 சதவீத ஆடைத் தொழிற்சாலைகள் மூன்று மாதங்களுக்குள் மூடப்பட்டுள்ளன,

இதில் 10 நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்கி ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வேலையிழந்ததால் பெண்கள் வேறு வழிகளில் பணத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.



2000 ஆடைத் தொழிற்சாலைகளுக்கு பூட்டு. வேறு வழிகளில் பணத்தைத் தேடும் வேலையிழந்த பெண்கள். சஜித் அதிர்ச்சித் தகவல் samugammedia ஆடைத் துறையில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பெரும்பாலான பெண்கள் வேலை இழந்துள்ளனர் என்றும், இதனால் அவர்களது குடும்ப நலன் நடவடிக்கைகள் கூட முடங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.இதுவரை 2000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு 533,858 பேர் வேலை இழந்துள்ளனர், 20 சதவீத ஆடைத் தொழிற்சாலைகள் மூன்று மாதங்களுக்குள் மூடப்பட்டுள்ளன,இதில் 10 நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்கி ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.வேலையிழந்ததால் பெண்கள் வேறு வழிகளில் பணத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement