• Nov 23 2024

அரசியலமைப்பு சூழ்ச்சி மூலம் ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிப்பதற்கு முயற்சி...! மக்கள் சக்தியுடன் தோற்கடிப்போம்- சபையில் சஜித் உறுதி...!

Sharmi / Jul 11th 2024, 2:51 pm
image

நாட்டில் தேர்தலை குழப்புவதற்கு உருவாக்கப்படும் சகல முயற்சிகள் மற்றும் மூலோபாயங்களை ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் மக்கள் சக்தியுடன் தோற்கடித்து இந்த நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமையினை வெற்றிபெற செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய(11) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் அரசியலமைப்பில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டிய கால எல்லை தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு ஜனநாயக நாடு, மக்கள் இறையான்மையை பாதுகாக்கின்ற ஒரு நாடு, சட்ட, நிர்வாக நீதி துறைகளை ஜனநாயக கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் பெரும்பான்மையினரின் அபிப்பிராயமாக, அரசியலமைப்பில் ஒரு சூழ்ச்சியை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

மக்கள் ஆணையில்லாத ஒரு ஜனாதிபதி, ஒரு திரிபடைந்த பலத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய அதிகாரத்தை முன்னெடுத்து செல்வதற்காக அரசியலமைப்புக்கு அப்பால் சென்ற முறைமைகளை பின்பற்றுவது ஒரு ஒழுக்கக் கேடான வெட்கக்கேடான விடயமாக காணப்படுகின்றது.

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலம் பாராளுமன்றில் கொண்டுவரப்பட்டது. அப்போது இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கும் ஆதரவு தெரிவிக்கின்றோம்.

தேர்தல் நடாத்தப்பட்டால் அரச ஊழியர்களுக்கு உரிய திகதியில் சம்பளம் வழங்க முடியாமல் போய்விடும் என கூறியிருந்தார்கள்.

தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை விலகிச் செல்லுமாறு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தது.தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர் ஒருவர் இராஜினாமா செய்துவிட்டார் என கூறி தேர்தல் ஆணைக்குழுவின் நடப்பெண் தொடர்பான பிரச்சினைகளையும் இழுத்திருந்தார்கள்.

இவ்வாறு இராஜினாமா செய்த அங்கத்தவருக்கு வடமாகாண ஆளுநர் பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எமக்கு நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலே ஆணைக்குழுவுக்கு அங்கத்தவர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டிருந்தது.

அதேவேளை இந்த நாட்டின் நிதி சக்தியை செலவளிப்பதற்கான சுற்றுநிருபத்தை முன்வைத்திருந்தார்கள். இவ்வாறு இராஜினாமா செய்த அங்கத்தவருக்கு வடமாகாண ஆளுநர் பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எமக்கு நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலே ஆணைக்குழுவுக்கு அங்கத்தவர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டிருந்தது.

அதேவேளை இந்த நாட்டின் நிதி சக்தியை செலவளிப்பதற்கான சுற்றுநிருபத்தை முன்வைத்திருந்தார்கள். இவ்வாறாக, அரசியலமைப்பு சூழ்ச்சிகள் இடம்பெற்றது.

நாட்டில் மக்கள் தற்போது பசியோடு வாழ்கின்றார்கள்இ மூன்று வேளை சாப்பிட்ட மக்கள் தற்போது இரண்டு வேளை சாப்பிடுகின்றனர். இரண்டு வேளை சாப்பிட்ட மக்கள்  ஒருவேளை சாப்பிடுகிறார்கள். ஒருவேளை சாப்பிட்ட மக்கள் இன்று பசியோடு அங்கலாய்த்துள்ளனர்.

மக்களின் வாழ்க்கை குறுக்கம் செய்யப்பட்டு வருமானம் இல்லாமலாக்கப்பட்டு சிறிய மற்றும் நடுத்தர மற்றும் விவசாய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எப்படியாவது இந்த அரசியலமைப்பு சூழ்ச்சிகள் மூலம் காலத்தை நீடிப்பதற்கு அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

எனவே, கோழைகளாக இருக்காது மக்கள் முன்னால் வாருங்கள் தேர்தலுக்கு முகம் கொடுக்க வாருங்கள். மக்கள் முன் சென்று மக்களின் தீர்ப்புக்களுக்கு தலைசாயுங்கள்.

இவ்வாறு அசிங்கமான வேலைகளை செய்யவேண்டாம். அரசியலமைப்புக்கு எதிரான வேலைகளை செய்யவேண்டாம் எனவும் தெரிவித்தார்.














அரசியலமைப்பு சூழ்ச்சி மூலம் ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிப்பதற்கு முயற்சி. மக்கள் சக்தியுடன் தோற்கடிப்போம்- சபையில் சஜித் உறுதி. நாட்டில் தேர்தலை குழப்புவதற்கு உருவாக்கப்படும் சகல முயற்சிகள் மற்றும் மூலோபாயங்களை ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் மக்கள் சக்தியுடன் தோற்கடித்து இந்த நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமையினை வெற்றிபெற செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இன்றைய(11) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,நாட்டின் அரசியலமைப்பில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டிய கால எல்லை தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரு ஜனநாயக நாடு, மக்கள் இறையான்மையை பாதுகாக்கின்ற ஒரு நாடு, சட்ட, நிர்வாக நீதி துறைகளை ஜனநாயக கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.நாட்டு மக்களின் பெரும்பான்மையினரின் அபிப்பிராயமாக, அரசியலமைப்பில் ஒரு சூழ்ச்சியை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.மக்கள் ஆணையில்லாத ஒரு ஜனாதிபதி, ஒரு திரிபடைந்த பலத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய அதிகாரத்தை முன்னெடுத்து செல்வதற்காக அரசியலமைப்புக்கு அப்பால் சென்ற முறைமைகளை பின்பற்றுவது ஒரு ஒழுக்கக் கேடான வெட்கக்கேடான விடயமாக காணப்படுகின்றது.தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலம் பாராளுமன்றில் கொண்டுவரப்பட்டது. அப்போது இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கும் ஆதரவு தெரிவிக்கின்றோம்.தேர்தல் நடாத்தப்பட்டால் அரச ஊழியர்களுக்கு உரிய திகதியில் சம்பளம் வழங்க முடியாமல் போய்விடும் என கூறியிருந்தார்கள்.தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை விலகிச் செல்லுமாறு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தது.தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர் ஒருவர் இராஜினாமா செய்துவிட்டார் என கூறி தேர்தல் ஆணைக்குழுவின் நடப்பெண் தொடர்பான பிரச்சினைகளையும் இழுத்திருந்தார்கள்.இவ்வாறு இராஜினாமா செய்த அங்கத்தவருக்கு வடமாகாண ஆளுநர் பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் எமக்கு நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலே ஆணைக்குழுவுக்கு அங்கத்தவர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டிருந்தது.அதேவேளை இந்த நாட்டின் நிதி சக்தியை செலவளிப்பதற்கான சுற்றுநிருபத்தை முன்வைத்திருந்தார்கள். இவ்வாறு இராஜினாமா செய்த அங்கத்தவருக்கு வடமாகாண ஆளுநர் பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் எமக்கு நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலே ஆணைக்குழுவுக்கு அங்கத்தவர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டிருந்தது.அதேவேளை இந்த நாட்டின் நிதி சக்தியை செலவளிப்பதற்கான சுற்றுநிருபத்தை முன்வைத்திருந்தார்கள். இவ்வாறாக, அரசியலமைப்பு சூழ்ச்சிகள் இடம்பெற்றது.நாட்டில் மக்கள் தற்போது பசியோடு வாழ்கின்றார்கள்இ மூன்று வேளை சாப்பிட்ட மக்கள் தற்போது இரண்டு வேளை சாப்பிடுகின்றனர். இரண்டு வேளை சாப்பிட்ட மக்கள்  ஒருவேளை சாப்பிடுகிறார்கள். ஒருவேளை சாப்பிட்ட மக்கள் இன்று பசியோடு அங்கலாய்த்துள்ளனர்.மக்களின் வாழ்க்கை குறுக்கம் செய்யப்பட்டு வருமானம் இல்லாமலாக்கப்பட்டு சிறிய மற்றும் நடுத்தர மற்றும் விவசாய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், எப்படியாவது இந்த அரசியலமைப்பு சூழ்ச்சிகள் மூலம் காலத்தை நீடிப்பதற்கு அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.எனவே, கோழைகளாக இருக்காது மக்கள் முன்னால் வாருங்கள் தேர்தலுக்கு முகம் கொடுக்க வாருங்கள். மக்கள் முன் சென்று மக்களின் தீர்ப்புக்களுக்கு தலைசாயுங்கள்.இவ்வாறு அசிங்கமான வேலைகளை செய்யவேண்டாம். அரசியலமைப்புக்கு எதிரான வேலைகளை செய்யவேண்டாம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement