• May 06 2024

ரஷ்யாவில் களைகட்டிய மாடுகளுக்கான அழகிப்போட்டி!

Sharmi / Dec 5th 2022, 10:28 pm
image

Advertisement

ரஷ்யாவில் மாடுகளுக்கான அழகிப்போட்டியில் முதல் பரிசை தட்டிச்சென்ற மாட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது.

ஆண்கள், பெண்கள்,  திருநங்கைகள் மற்றும் குழந்தைகளுக்கு அழகிப்போட்டி நடைபெறுவது பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மிக வித்தியாசமாக சில நாடுகளில் விலங்குகளுக்கு அழகிப்போட்டிகள் நடத்தப்படுகின்றது.

சமீபத்தில் கூட கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பைகளுக்கு மத்தியில் ஒட்டகத்துக்கு அழகிப்போட்டி நடந்தது.

தற்போது ரஷ்யாவில் மாடுகளுக்கான அழகிப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. Yakutia  நகரில் நடந்த இப்போட்டியில் 4 மாதங்களேயான பசு Michi முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு Teleh-Dering என்ற கிராமத்தில் விவசாயிகள் தினத்தை கொண்டாடும் விதமாக மாடுகளுக்கான அழகிப்போட்டி நடந்துள்ளது. 2020ம் ஆண்டு கொரோனாவால் போட்டிகள் நடத்த முடியாமல் போக, தற்போது 2022ம் ஆண்டு வெற்றிகரமாக அழகிப்போட்டி நடந்து முடிந்துள்ளது.

மொத்தம் 25 மாடுகள் பங்குபெற, Michi  முதல் பரிசை வென்றுள்ளது. யாகுட் மற்றும் ஹியஃபோர்ட் என்ற இரண்டு இனங்களின் கலவை பசுவே இதுவாகும். இரண்டாவது முறையாக வெற்றி பெறும் Michiக்கு 40 லிட்டர் பால் கேன் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாம்.

மாட்டின் முதுகில் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களால் ஆன துணிகளால் அலங்கரிக்கப்பட்டு,  தலையில் பூ  சூடி, கழுத்தில் முத்து மாலை அணிந்து சிரித்தபடி போஸ் கொடுத்த Michiன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



ரஷ்யாவில் களைகட்டிய மாடுகளுக்கான அழகிப்போட்டி ரஷ்யாவில் மாடுகளுக்கான அழகிப்போட்டியில் முதல் பரிசை தட்டிச்சென்ற மாட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது.ஆண்கள், பெண்கள்,  திருநங்கைகள் மற்றும் குழந்தைகளுக்கு அழகிப்போட்டி நடைபெறுவது பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மிக வித்தியாசமாக சில நாடுகளில் விலங்குகளுக்கு அழகிப்போட்டிகள் நடத்தப்படுகின்றது.சமீபத்தில் கூட கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பைகளுக்கு மத்தியில் ஒட்டகத்துக்கு அழகிப்போட்டி நடந்தது.தற்போது ரஷ்யாவில் மாடுகளுக்கான அழகிப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. Yakutia  நகரில் நடந்த இப்போட்டியில் 4 மாதங்களேயான பசு Michi முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு Teleh-Dering என்ற கிராமத்தில் விவசாயிகள் தினத்தை கொண்டாடும் விதமாக மாடுகளுக்கான அழகிப்போட்டி நடந்துள்ளது. 2020ம் ஆண்டு கொரோனாவால் போட்டிகள் நடத்த முடியாமல் போக, தற்போது 2022ம் ஆண்டு வெற்றிகரமாக அழகிப்போட்டி நடந்து முடிந்துள்ளது.மொத்தம் 25 மாடுகள் பங்குபெற, Michi  முதல் பரிசை வென்றுள்ளது. யாகுட் மற்றும் ஹியஃபோர்ட் என்ற இரண்டு இனங்களின் கலவை பசுவே இதுவாகும். இரண்டாவது முறையாக வெற்றி பெறும் Michiக்கு 40 லிட்டர் பால் கேன் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாம்.மாட்டின் முதுகில் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களால் ஆன துணிகளால் அலங்கரிக்கப்பட்டு,  தலையில் பூ  சூடி, கழுத்தில் முத்து மாலை அணிந்து சிரித்தபடி போஸ் கொடுத்த Michiன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement