• Feb 12 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்ட தோட்டாவால் பதற்றம்; பொலிஸார் வாக்குமூலம்

Chithra / Feb 10th 2025, 12:32 pm
image

 

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பயண பொதிகள் பகுதிக்கு அருகில் 9 மி.மீ தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இது அவதானிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், தோட்டாவை அவதானித்த சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்த தோட்டாவை மேலதிக விசாரணைக்காக இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்ட தோட்டாவால் பதற்றம்; பொலிஸார் வாக்குமூலம்  கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பயண பொதிகள் பகுதிக்கு அருகில் 9 மி.மீ தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது.சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இது அவதானிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், தோட்டாவை அவதானித்த சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.இந்த தோட்டாவை மேலதிக விசாரணைக்காக இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement