• May 06 2024

வெப்பம் அதிகரிப்பால் சூடு பிடித்த வியாபாரங்கள்! வெள்ளரிப் பழத்திற்கு அதிக கிராக்கி samugammedia

Chithra / Apr 6th 2023, 11:17 am
image

Advertisement

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை  அதிகரித்துள்ளன.

குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி,  கல்முனை- அக்கரைப்பற்று, பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி   மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து  விற்பனை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் ஆர்வத்துடன் இவ் வெள்ளரிப்பழத்தினை கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இது தவிர தற்போது அதிக வெப்பம் காரணமாக  அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் 150 ரூபாய் முதல் சுமார் 850  ரூபாய் வரை இவ் வெள்ளரிப்பழம்  சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


வெப்பம் அதிகரிப்பால் சூடு பிடித்த வியாபாரங்கள் வெள்ளரிப் பழத்திற்கு அதிக கிராக்கி samugammedia அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை  அதிகரித்துள்ளன.குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி,  கல்முனை- அக்கரைப்பற்று, பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி   மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து  விற்பனை செய்து வருகின்றனர்.பொதுமக்கள் ஆர்வத்துடன் இவ் வெள்ளரிப்பழத்தினை கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.இது தவிர தற்போது அதிக வெப்பம் காரணமாக  அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் 150 ரூபாய் முதல் சுமார் 850  ரூபாய் வரை இவ் வெள்ளரிப்பழம்  சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement