• May 07 2024

திருமலையில் சிங்கள மற்றும் தமிழர்களுக்கு இடையில் மோதல் -மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவிப்பது என்ன??samugammedia

Sharmi / Apr 11th 2023, 2:31 pm
image

Advertisement

திருகோணமலை திருக்கடலூர் - விஜிதபுர பகுதியில் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் இடம்பெற்றிருந்த கைகலப்பானது, இனப்பிரச்சனையை தோற்றுவிக்கின்ற முரண்பாடு குழப்பம் அல்ல என என மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற குறித்த வழக்கில் சந்தேக நபர்கள் சார்பாக பிரசன்னமாகிய பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீதவான் முன்னிலையில் இதனை தெரிவித்த போது அதற்கு சிங்கள சட்டத்தரணிகளும் அதனை ஆமோதித்திருந்ததாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.

இந்த கைகலப்பானது சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையிலான பிரச்சனை அல்ல என்றும் ஒரே தொழிலை மேற்கொள்ளுகின்ற அதாவது மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுகின்ற இரு தரப்புக்கு இடையில் தொழில் ரீதியாக இடம்பெற்ற கைகலப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பொலிசார் இதனை இனப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் அம்சங்கள் என குறிப்பிட்டிருந்ததாகவும் ஆனால் இது அவ்வாறான முரண்பாடு இல்லை என்றும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா திட்டவட்டமாக தெரிவித்திரந்தார்.

எனவே சமூகத்தின் நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்தி இதனை சட்ட ரீதியாக அணுகியுள்ளதாகவும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

திருமலையில் சிங்கள மற்றும் தமிழர்களுக்கு இடையில் மோதல் -மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவிப்பது என்னsamugammedia திருகோணமலை திருக்கடலூர் - விஜிதபுர பகுதியில் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் இடம்பெற்றிருந்த கைகலப்பானது, இனப்பிரச்சனையை தோற்றுவிக்கின்ற முரண்பாடு குழப்பம் அல்ல என என மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற குறித்த வழக்கில் சந்தேக நபர்கள் சார்பாக பிரசன்னமாகிய பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.நீதவான் முன்னிலையில் இதனை தெரிவித்த போது அதற்கு சிங்கள சட்டத்தரணிகளும் அதனை ஆமோதித்திருந்ததாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.இந்த கைகலப்பானது சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையிலான பிரச்சனை அல்ல என்றும் ஒரே தொழிலை மேற்கொள்ளுகின்ற அதாவது மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுகின்ற இரு தரப்புக்கு இடையில் தொழில் ரீதியாக இடம்பெற்ற கைகலப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் பொலிசார் இதனை இனப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் அம்சங்கள் என குறிப்பிட்டிருந்ததாகவும் ஆனால் இது அவ்வாறான முரண்பாடு இல்லை என்றும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா திட்டவட்டமாக தெரிவித்திரந்தார்.எனவே சமூகத்தின் நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்தி இதனை சட்ட ரீதியாக அணுகியுள்ளதாகவும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement