• May 06 2024

30 ஸ்மார்ட்போன்களுடன் சிக்கிய தம்பதியினர்..! இதுக்காகவா..! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Jun 26th 2023, 1:28 pm
image

Advertisement

மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் நெடுஞ்சாலையில் பயணித்தவர்களின் தொலைபேசிகளை திருடிய நபர் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் இருபது இலட்சம் பெறுமதியான 30 ஸ்மார்ட்ஃபோன்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணும், ஜாஎல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடித் தப்பிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சந்தேகநபரின் நண்பரிடமிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோயின் போதைக்கு அதிக அடிமையாகியுள்ளதாக கூறப்படும் தம்பதியினர், ஹெரோயின் குடிப்பதற்காக நவீன கையடக்க தொலைபேசியை திருடி விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் மனைவி என கூறப்படும் பெண் முதலில் மாலபே பிட்டுகல பிரதேசத்தில் வைத்து ஐந்து கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சில காலமாக பச்சை குத்தும் கலைஞராக பணிபுரிந்து வந்ததாகவும், பின்னர் போதைப்பொருளுக்கு அடிமையான பின்னர் திருடுவதற்கு தூண்டப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

30 ஸ்மார்ட்போன்களுடன் சிக்கிய தம்பதியினர். இதுக்காகவா. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் நெடுஞ்சாலையில் பயணித்தவர்களின் தொலைபேசிகளை திருடிய நபர் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமார் இருபது இலட்சம் பெறுமதியான 30 ஸ்மார்ட்ஃபோன்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.மொனராகலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணும், ஜாஎல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடித் தப்பிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சந்தேகநபரின் நண்பரிடமிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.ஹெரோயின் போதைக்கு அதிக அடிமையாகியுள்ளதாக கூறப்படும் தம்பதியினர், ஹெரோயின் குடிப்பதற்காக நவீன கையடக்க தொலைபேசியை திருடி விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.சந்தேக நபரின் மனைவி என கூறப்படும் பெண் முதலில் மாலபே பிட்டுகல பிரதேசத்தில் வைத்து ஐந்து கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் சில காலமாக பச்சை குத்தும் கலைஞராக பணிபுரிந்து வந்ததாகவும், பின்னர் போதைப்பொருளுக்கு அடிமையான பின்னர் திருடுவதற்கு தூண்டப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement