• May 06 2024

மகள் ஷர்மிளாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!காரினை பரிசளித்த நடிகர் கமல்ஹாசன்..!samugammedia

Sharmi / Jun 26th 2023, 1:18 pm
image

Advertisement

கோவையை  சேர்ந்த பெண் பேரூந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு நடிகர் கமல்ஹாசன் காரினை பரிசளித்துள் அவரை ஊக்கப்படுத்தியுள்ளார்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த 25 வயதான ஷர்மிளா கோவையில் முதல் பெண் ஓட்டுநராக மாறியுள்ளார்.

அவர், கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்லக் கூடிய தனியார் பேருந்தை இயக்கி வந்த நிலையில், அந்த  தனியார் பேரூந்தில்  திமுக துணை பொதுச்செயலாளரும்,  தூத்துக்குடி மாவட்ட எம்.பி.யுமான கனிமொழி பயணம் செய்தார்.

அதன் பொழுது, ஷர்மிளாவை  எம்.பி பாராட்டிய நிலையில் பேரூந்து உரிமையாளருக்கும்,  பெண் ஓட்டுநருக்கும்  இடையே  வாக்குவாதம் ஏற்பட்டமையால்   ஷர்மிளா பணியிலிருந்து விலகியுள்ளார்.

விளம்பரம் தேடும் முயற்சியில் ஈடுபட்டதாக பேரூந்து உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் ஷர்மிளா  பதவி விலகியதாக தகவல்கள்  வெளியாகின.

இந்நிலையில், ஷர்மிளாவிற்கு நடிகர் கமல்ஹாசன் காரினை பரிசளித்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

அதனை தொடர்ந்து  நடிகர் கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், கோயம்புத்தூரில் முதலாவது பெண் பேரூந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.

பேரூந்து ஓட்டுநராக வர வேண்டும் என்ற தனது கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்பட செய்து வந்தார். அதற்காக பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார்.

தன வயதையொத்த பெண்களிற்கு முன்னுதாரணாக திகழ்ந்த அவர், சமீபத்திய குறித்த விவாதம் எனது கவனத்திற்கு வந்ததும் மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவர் ஊர் ஓட்டுநராக மட்டுமே இருந்து விட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே எனது நம்பிக்கை.

கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை வழங்குகின்றது. வாடகை கார் ஊட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை அவர் தொடரவிருகின்றார்.

ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆள வருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டுமென விரும்புகின்றேன்.

 அத்துடன் மகள் ஷர்மிளாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மகள் ஷர்மிளாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.காரினை பரிசளித்த நடிகர் கமல்ஹாசன்.samugammedia கோவையை  சேர்ந்த பெண் பேரூந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு நடிகர் கமல்ஹாசன் காரினை பரிசளித்துள் அவரை ஊக்கப்படுத்தியுள்ளார். கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த 25 வயதான ஷர்மிளா கோவையில் முதல் பெண் ஓட்டுநராக மாறியுள்ளார். அவர், கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்லக் கூடிய தனியார் பேருந்தை இயக்கி வந்த நிலையில், அந்த  தனியார் பேரூந்தில்  திமுக துணை பொதுச்செயலாளரும்,  தூத்துக்குடி மாவட்ட எம்.பி.யுமான கனிமொழி பயணம் செய்தார். அதன் பொழுது, ஷர்மிளாவை  எம்.பி பாராட்டிய நிலையில் பேரூந்து உரிமையாளருக்கும்,  பெண் ஓட்டுநருக்கும்  இடையே  வாக்குவாதம் ஏற்பட்டமையால்   ஷர்மிளா பணியிலிருந்து விலகியுள்ளார். விளம்பரம் தேடும் முயற்சியில் ஈடுபட்டதாக பேரூந்து உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் ஷர்மிளா  பதவி விலகியதாக தகவல்கள்  வெளியாகின. இந்நிலையில், ஷர்மிளாவிற்கு நடிகர் கமல்ஹாசன் காரினை பரிசளித்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  அதனை தொடர்ந்து  நடிகர் கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், கோயம்புத்தூரில் முதலாவது பெண் பேரூந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.பேரூந்து ஓட்டுநராக வர வேண்டும் என்ற தனது கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்பட செய்து வந்தார். அதற்காக பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார். தன வயதையொத்த பெண்களிற்கு முன்னுதாரணாக திகழ்ந்த அவர், சமீபத்திய குறித்த விவாதம் எனது கவனத்திற்கு வந்ததும் மிகுந்த வேதனை அடைந்தேன். அவர் ஊர் ஓட்டுநராக மட்டுமே இருந்து விட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே எனது நம்பிக்கை. கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை வழங்குகின்றது. வாடகை கார் ஊட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை அவர் தொடரவிருகின்றார்.ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆள வருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டுமென விரும்புகின்றேன்.  அத்துடன் மகள் ஷர்மிளாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement