• Nov 28 2024

நோயாளர் காவு வாகனத்தின் மூலம் பரீட்சை நிலையம் சென்ற டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி - க.பொ.த உயர்தர பரீட்சை எழுத அனுமதி..!samugammedia

Tharun / Jan 13th 2024, 7:06 pm
image

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவி ஒருவர் அவசர நோயாளர் வாகனமூடாக பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் இன்றையதினம் பரீட்சைக்கு  தோற்ற வேண்டிய நிலைமையில் உடல்நிலையில் முன்னேற்ற மேற்படாத காரணத்தினால் மருத்துவக்கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மருத்துவமனை தரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது. 

 குறுகிய நேரவிடுப்பு அடிப்படையில் மருத்துவமனையில் இருந்து அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலமாக பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்நிலை பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவி பரீட்சை நிலையத்துக்கு காலை அழைத்து செல்லப்பட்டு மருத்துவ தாதியின் கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

நோயாளர் காவு வாகனத்தின் மூலம் பரீட்சை நிலையம் சென்ற டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி - க.பொ.த உயர்தர பரீட்சை எழுத அனுமதி.samugammedia டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவி ஒருவர் அவசர நோயாளர் வாகனமூடாக பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் இன்றையதினம் பரீட்சைக்கு  தோற்ற வேண்டிய நிலைமையில் உடல்நிலையில் முன்னேற்ற மேற்படாத காரணத்தினால் மருத்துவக்கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மருத்துவமனை தரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது.  குறுகிய நேரவிடுப்பு அடிப்படையில் மருத்துவமனையில் இருந்து அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலமாக பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்நிலை பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவி பரீட்சை நிலையத்துக்கு காலை அழைத்து செல்லப்பட்டு மருத்துவ தாதியின் கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

Advertisement

Advertisement

Advertisement