• Nov 28 2024

தம்பலகாமம் வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!

Sharmi / Oct 7th 2024, 1:04 pm
image

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேச வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழா நேற்றையதினம்(06) காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

நிகழ்வை ஊடவியலாளர்கள் படம் எடுக்க சென்ற போது வைத்தியசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததுடன், உரிய அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற வேண்டும் என வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். 

இது பற்றி ஊடகவியலாளர்கள் குறித்த கட்டிட திறப்பு விழா பற்றி உரிய மாகாண சுகாதார  அமைச்சின் செயலாளர், மாகாண பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் ஆகியோர்களை தொடர்பு கொண்டு வினவிய போது தங்களுக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என தெரிவித்தார்கள்.

குறித்த வைத்தியசாலை புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை 2019.06.27 இல் அப்போதைய பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவால் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அடிக்கல் நடப்பட்டது. 

பின்னர்  கட்டிட வேலைகள் சுமார் இரண்டரை வருட காலமாக இடைநிறுத்தப்பட்டது. 

இப் பிரதேச வைத்தியசாலையின் பழைய கட்டிடமானது 2023.04.01 அன்று தீக்கிரையாக்கப்பட்டு பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் சாம்பலாகின.

மூன்று சமூகங்களை சேர்ந்த மக்கள் இவ் வைத்தியசாலை ஊடாக பயனடைந்து வந்த போதிலும் புதிய கட்டிட திறப்பு விழாவின் போது ஊடகர்களுக்கு மறுப்பு தெரிவித்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தம்பலகாமம் வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு. திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேச வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழா நேற்றையதினம்(06) காலை 10 மணிக்கு இடம்பெற்றது.இவ் நிகழ்வில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.நிகழ்வை ஊடவியலாளர்கள் படம் எடுக்க சென்ற போது வைத்தியசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததுடன், உரிய அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற வேண்டும் என வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இது பற்றி ஊடகவியலாளர்கள் குறித்த கட்டிட திறப்பு விழா பற்றி உரிய மாகாண சுகாதார  அமைச்சின் செயலாளர், மாகாண பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் ஆகியோர்களை தொடர்பு கொண்டு வினவிய போது தங்களுக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என தெரிவித்தார்கள்.குறித்த வைத்தியசாலை புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை 2019.06.27 இல் அப்போதைய பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவால் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அடிக்கல் நடப்பட்டது. பின்னர்  கட்டிட வேலைகள் சுமார் இரண்டரை வருட காலமாக இடைநிறுத்தப்பட்டது. இப் பிரதேச வைத்தியசாலையின் பழைய கட்டிடமானது 2023.04.01 அன்று தீக்கிரையாக்கப்பட்டு பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் சாம்பலாகின.மூன்று சமூகங்களை சேர்ந்த மக்கள் இவ் வைத்தியசாலை ஊடாக பயனடைந்து வந்த போதிலும் புதிய கட்டிட திறப்பு விழாவின் போது ஊடகர்களுக்கு மறுப்பு தெரிவித்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement