• May 06 2024

நபர் ஒருவரை மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய டயானா..! இணையத்தில் பகிரப்படும் குரல் ஒலிப்பதிவு samugammedia

Chithra / Jul 9th 2023, 9:51 am
image

Advertisement

 சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தொலைபேசியில் ஒரு நபரை மோசமாக பேசிய குரல் ஒலிப்பதிவை இணையத்தில் இருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் இணைய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் ஒலிப்பதிவை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சரின் ஊடக செயலாளர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஷான் கனேகொட என்ற நபர் கடந்த புதன்கிழமை இராஜாங்க அமைச்சருக்கு தொலைபேசியில் பலமுறை தொந்தரவு செய்ததாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர், குறித்த நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த உரையாடலின் போது, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நிதானம் இழந்து அந்த நபரை மோசமான வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குரல் ஒலிப்பதிவு தற்போது இராஜாங்க அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதால், அந்த குரல் ஒலிப்பதிவு பரப்பப்படுவதை உடனடியாக அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுக்குமாறு அவரது அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.


நபர் ஒருவரை மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய டயானா. இணையத்தில் பகிரப்படும் குரல் ஒலிப்பதிவு samugammedia  சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தொலைபேசியில் ஒரு நபரை மோசமாக பேசிய குரல் ஒலிப்பதிவை இணையத்தில் இருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் இணைய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில், சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் ஒலிப்பதிவை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சரின் ஊடக செயலாளர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் ஷான் கனேகொட என்ற நபர் கடந்த புதன்கிழமை இராஜாங்க அமைச்சருக்கு தொலைபேசியில் பலமுறை தொந்தரவு செய்ததாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர், குறித்த நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த உரையாடலின் போது, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நிதானம் இழந்து அந்த நபரை மோசமான வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குரல் ஒலிப்பதிவு தற்போது இராஜாங்க அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதால், அந்த குரல் ஒலிப்பதிவு பரப்பப்படுவதை உடனடியாக அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுக்குமாறு அவரது அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement