• May 06 2024

டயானாவிடம் உள்ளது போலி...!அசல் என்னிடம் உள்ளது – சபையில் முழங்கிய எம்.பி.!samugammedia

Sharmi / Jun 8th 2023, 9:38 am
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் பதவியிலிருந்து விலகியதாக கையொப்பமிட்ட ஆவணம் போலியானது என டயானா கமகே தெரிவித்திருந்த நிலையில் அதன் அசல் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சபையில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் சபை அமர்வில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தனது போலியான கையொப்பத்துடன் நீதிமன்றத்திற்கு பொய்யான ஆவணத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்த நிலையில் டயானா கமகே பொய்யான கருத்தை வெளியிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

நான் நாடாளுமன்றத்தில் இல்லாத போது, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே எனது பெயர் தொடர்புபடுத்தி பொய்யான கருத்தை வெளியிட்டார்.

நாங்கள் போலி ஆவணத்தை சமர்ப்பித்தோம் என்று கூறியுள்ளார். அசல் ஆவணம் எங்களிடம் உள்ளது என்பதை நான் தெளிவாக கூறுகின்றேன்.

இது தொடர்பாக அவரது கையொப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்க இரசாயன பகுப்பாளரையும் சிஐடியையும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

டயானாவிடம் உள்ளது போலி.அசல் என்னிடம் உள்ளது – சபையில் முழங்கிய எம்.பி.samugammedia ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் பதவியிலிருந்து விலகியதாக கையொப்பமிட்ட ஆவணம் போலியானது என டயானா கமகே தெரிவித்திருந்த நிலையில் அதன் அசல் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சபையில் குறிப்பிட்டுள்ளார்.நேற்றையதினம் சபை அமர்வில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்திருந்தார்.தனது போலியான கையொப்பத்துடன் நீதிமன்றத்திற்கு பொய்யான ஆவணத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்த நிலையில் டயானா கமகே பொய்யான கருத்தை வெளியிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.நான் நாடாளுமன்றத்தில் இல்லாத போது, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே எனது பெயர் தொடர்புபடுத்தி பொய்யான கருத்தை வெளியிட்டார். நாங்கள் போலி ஆவணத்தை சமர்ப்பித்தோம் என்று கூறியுள்ளார். அசல் ஆவணம் எங்களிடம் உள்ளது என்பதை நான் தெளிவாக கூறுகின்றேன்.இது தொடர்பாக அவரது கையொப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்க இரசாயன பகுப்பாளரையும் சிஐடியையும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement