• May 06 2024

7 உயிர்களை காவுகொண்ட தியத்தலாவ விபத்து - 2 சாரதிகளுக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

Chithra / Apr 24th 2024, 4:01 pm
image

Advertisement

 

தியத்தலாவ  கார் பந்தய போட்டியின் போது 7 பேரை காவு கொண்ட விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சாரதிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சாரதிகள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தியத்தலாவ ஃபாக்ஸ்ஹில் மோட்டார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 15 பேர் தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலையிலும் மூவர் பதுளை போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதுகாப்பு நடைபாதையில் போட்டியை பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது கார் ஒன்று தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம்  தீர்மானித்துள்ளது.

7 உயிர்களை காவுகொண்ட தியத்தலாவ விபத்து - 2 சாரதிகளுக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.  தியத்தலாவ  கார் பந்தய போட்டியின் போது 7 பேரை காவு கொண்ட விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சாரதிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சாரதிகள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தியத்தலாவ ஃபாக்ஸ்ஹில் மோட்டார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 15 பேர் தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலையிலும் மூவர் பதுளை போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாதுகாப்பு நடைபாதையில் போட்டியை பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது கார் ஒன்று தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம்  தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement