• May 07 2024

இந்தோனேசியாவின் முக்கிய பகுதியில் நிலநடுக்கம் பதிவு!samugammedia

Sharmi / Apr 13th 2023, 2:18 pm
image

Advertisement

இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த தனிம்பார் தீவு பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த, மித அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 70.2 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிம்பார் தீவு பகுதிகள் 65-க்கும் மேற்பட்ட தீவு கூட்டங்களை உள்ளடக்கியது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், அந்தமான் நிகோபார் தீவில், கேம்ப்பெல் பே என்ற இடத்தில் இன்று காலை மித அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 60 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் முக்கிய பகுதியில் நிலநடுக்கம் பதிவுsamugammedia இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த தனிம்பார் தீவு பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த, மித அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 70.2 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தனிம்பார் தீவு பகுதிகள் 65-க்கும் மேற்பட்ட தீவு கூட்டங்களை உள்ளடக்கியது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.இந்த நிலையில், அந்தமான் நிகோபார் தீவில், கேம்ப்பெல் பே என்ற இடத்தில் இன்று காலை மித அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 60 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement