• May 06 2024

தமிழினப் படுகொலை: பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும் - ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல் ! samugammedia

Tamil nila / Sep 28th 2023, 7:46 am
image

Advertisement

தமிழினப் படுகொலை விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும்  என பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ்  ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54ஆவது அமர்வில் , பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் முன்னாள் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போதைய தலைவருமான அன்புமணி ராமதாஸ் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் , ஆண்டுகளாக இனவாதம், பாகுபாடு மற்றும் வேறு பல வடிவங்களிலான சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் பலர் தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அன்புமணி எடுத்துரைத்தார்.

ஐக்கிய நாடுகள் அவையின் மூலமாக  இலங்கை அரசி பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் (ICC), பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றம் (ICJ) மற்றும் பிற பன்னாட்டு பொறிமுறை அமைப்புகளில் கொண்டு சென்று நிறுத்தி தண்டனை பெற்றுத் தருதல்  ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - என்றார். 

இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழினப் படுகொலை: பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும் - ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல் samugammedia தமிழினப் படுகொலை விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும்  என பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ்  ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54ஆவது அமர்வில் , பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் முன்னாள் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போதைய தலைவருமான அன்புமணி ராமதாஸ் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் , ஆண்டுகளாக இனவாதம், பாகுபாடு மற்றும் வேறு பல வடிவங்களிலான சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.இலங்கையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் பலர் தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அன்புமணி எடுத்துரைத்தார்.ஐக்கிய நாடுகள் அவையின் மூலமாக  இலங்கை அரசி பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் (ICC), பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றம் (ICJ) மற்றும் பிற பன்னாட்டு பொறிமுறை அமைப்புகளில் கொண்டு சென்று நிறுத்தி தண்டனை பெற்றுத் தருதல்  ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - என்றார். இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement