• Nov 28 2024

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி இறக்குமதி - ஜனாதிபதி அநுர பணிப்பு

Chithra / Oct 8th 2024, 11:33 am
image

 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சில நாடுகளில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படுமா என ஜனாதிபதி குறித்த சங்கத்திடம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம், 

இதுவரையில் தமது இறக்குமதி நடவடிக்கைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் தலைவர் அநுர குமார திஸாநாயக்க சங்கப் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி இறக்குமதி - ஜனாதிபதி அநுர பணிப்பு  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.சில நாடுகளில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படுமா என ஜனாதிபதி குறித்த சங்கத்திடம் வினவியுள்ளார்.இதற்கு பதிலளித்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம், இதுவரையில் தமது இறக்குமதி நடவடிக்கைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.அத்துடன் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் தலைவர் அநுர குமார திஸாநாயக்க சங்கப் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement