• May 06 2024

கேரளாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு - 37 பேர் படுகாயம்! samugammedia

Tamil nila / Oct 29th 2023, 4:52 pm
image

Advertisement

கேரள மாநிலம் களமசேரியில் நடந்த  கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு எற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 37  பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறித்துவ மதவழிபாட்டு கூட்டரங்கு 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் கிட்டத்தட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இந்நிலையில் இன்று காலை மக்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யும் பகுதியில் 3 முறை பயங்கர சத்தத்துடன் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பயங்கர ஏற்பட்ட தீ விபத்தில் அருகிலிருந்த பொருள்கள் அனைத்தும் பற்றி இருந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் இதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 37க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது அந்த இடத்தில் என்ன வெடித்தது? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



"காயமடைந்த 35க்கும் மேற்பட்டோரில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நடைபெற்றது பயங்கரவாத தாக்குதலா? என்பது பற்றி விசாரணைக்கு பிறகே தெரியவரும் ” என்று தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு நடந்த அரங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டு அப்பகுதியில் தீவிரமாக தீயணைப்புத் துறையினரால் மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இதன் எதிரொலியாக கேரளா முழுவதும் கண்காணிப்பானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


கேரளாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு - 37 பேர் படுகாயம் samugammedia கேரள மாநிலம் களமசேரியில் நடந்த  கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு எற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 37  பேர் படுகாயமடைந்துள்ளனர்.கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறித்துவ மதவழிபாட்டு கூட்டரங்கு 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் கிட்டத்தட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்நிலையில் இன்று காலை மக்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யும் பகுதியில் 3 முறை பயங்கர சத்தத்துடன் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பயங்கர ஏற்பட்ட தீ விபத்தில் அருகிலிருந்த பொருள்கள் அனைத்தும் பற்றி இருந்துள்ளது.இந்த குண்டு வெடிப்பில் இதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 37க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது அந்த இடத்தில் என்ன வெடித்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது."காயமடைந்த 35க்கும் மேற்பட்டோரில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நடைபெற்றது பயங்கரவாத தாக்குதலா என்பது பற்றி விசாரணைக்கு பிறகே தெரியவரும் ” என்று தெரிவித்துள்ளார்.குண்டுவெடிப்பு நடந்த அரங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டு அப்பகுதியில் தீவிரமாக தீயணைப்புத் துறையினரால் மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இதன் எதிரொலியாக கேரளா முழுவதும் கண்காணிப்பானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement