• May 06 2024

லெபனான் ஐ.நா. அமைதி காக்கும் பணியை வெற்றிகரமாக முடித்தவர்கள் நாடு திரும்பல்..!!

Tamil nila / Apr 3rd 2024, 10:37 pm
image

Advertisement

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இருந்த இலங்கை இராணுவத்தின் 14 வது பாதுகாப்புப் படைக் குழு, தமது கடமை காலத்தின் நிறைவின் பின்னர்  2024 ஏப்ரல் 02 நாடுதிரும்பியது. 

ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக 2023 மார்ச் மாதம் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்தக் குழு, ஐநா இடைக்காலப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றியது. இலங்கை பாதுகாப்பு படைக் குழுவின் கட்டளை அதிகாரி கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி அவர்களின் தலைமையில் 10 அதிகாரிகளும் 115 சிப்பாய்களும் தங்கள் கடமை காலத்தின் நிறைவின் பின்னர் நாட்டை வந்தடைந்தனர். 

இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எம்.எல். ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜீ, மற்றும் அப்படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் கேஏடிஎன்ஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுவை வரவேற்றனர்.





லெபனான் ஐ.நா. அமைதி காக்கும் பணியை வெற்றிகரமாக முடித்தவர்கள் நாடு திரும்பல். லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இருந்த இலங்கை இராணுவத்தின் 14 வது பாதுகாப்புப் படைக் குழு, தமது கடமை காலத்தின் நிறைவின் பின்னர்  2024 ஏப்ரல் 02 நாடுதிரும்பியது. ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக 2023 மார்ச் மாதம் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்தக் குழு, ஐநா இடைக்காலப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றியது. இலங்கை பாதுகாப்பு படைக் குழுவின் கட்டளை அதிகாரி கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி அவர்களின் தலைமையில் 10 அதிகாரிகளும் 115 சிப்பாய்களும் தங்கள் கடமை காலத்தின் நிறைவின் பின்னர் நாட்டை வந்தடைந்தனர். இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எம்.எல். ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜீ, மற்றும் அப்படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் கேஏடிஎன்ஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுவை வரவேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement