• May 07 2024

தமிழரின் தலையை கொய்வேன் என பிதற்றும் மேர்வின்..! அனுராதபுரத்தில் தலை-வெட்டியானுக்கு கிடைத்த மரியாதை..! மனோ சீற்றம்...!samugammedia

Sharmi / Aug 17th 2023, 3:12 pm
image

Advertisement

இராவணன் ஒரு விபூதி தரித்த சைவத்தமிழன். அவர் ஒரு சிங்களவர் என எண்ணுபவர்களும் இருக்கிறார்கள் எனவும் அது அவரவர்கள் எண்ணம் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எல்லாளனுடன் வந்த, தேயிலை கொழுந்து பறிக்க வந்த, சோழர்களுக்கு இந்நாட்டில் இடமில்லை என்றும், எல்லா கோவில்களும் முன்னாள் விகாரைகள் என கூறியும், மேர்வின் சில்வா “தமிழரின் தலையை கொய்வேன்” என பிதற்றுகிறார்.

எல்லாளன் அனுராதபுரத்தில் 44 வருடங்கள் ஆட்சி செய்தார். மக்கள் ஆதரவு இல்லாவிட்டால், இது முடியுமா? ஆனால், இந்த “தலை-வெட்டியான்” கடந்த முறை அனுராதபுரத்தில்தான் போட்டியிட்டார். சிலநூறு வாக்குகளுடன் படுதோல்வி..! எப்படி, எல்லாளனின் அனுராதபுரத்தில் தலை-வெட்டியானுக்கு கிடைத்த மரியாதை?

அதுபோல் எதிர்கட்சி எம்பி புத்திக பத்திரன, “ராவணன் யார்” என்ற பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தாலும் வந்தார். இனி பிரேரணைகள் கொண்டு வந்தால், அவற்றை பார்த்து ஒப்புதல் அளிக்கும்படி சற்றுமுன் எதிர்க்கட்சி தலைவர் சஜித்திடம் சொன்னேன்.

சரியோ, பிழையோ, இவை அரசியல்வாதிகளால் பேசப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல. நாட்டில் ஒவ்வொருவருக்கும் பாரம்பரிய நம்பிக்கைகள் உண்டு.“இராவணன் ஒரு விபூதி தரித்த சைவத்தமிழன்” என நான் நம்புகிறேன். அவர் ஒரு சிங்களவர் என எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். அது அவரவர்கள் எண்ணம்.

ராவணன், ராமன், சீதை, ராமாயணம் எல்லாமே (Myth) கட்டுக்கதை என்று சொல்பவர்களும் உள்ளார்கள். இதெல்லாம் கருத்து சுதந்திரம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தைய சரித்திரம் பற்றி திட்டவட்டமாக அறிய முடியாது.

இந்நிலையில் இன்றைய கேள்விகளுக்கு, அன்றைய சரித்திரத்தில் நுழைந்து பதில் தேடும் மூடர்கள் மத்தியில் வாழ்வதை எண்ணி வருந்துகிறேன். சக்சின், என் மகன், சொல்கிறார், “ அப்பி, ஒன்று நீங்கள் ராவணன் காலத்தில் பிறந்திருக்க வேண்டும். அல்லது இன்னமும் ஐம்பது ஆண்டுகளின் பின் பிறந்திருக்க வேண்டும்”.எனவும் தெரிவித்தார்.

தமிழரின் தலையை கொய்வேன் என பிதற்றும் மேர்வின். அனுராதபுரத்தில் தலை-வெட்டியானுக்கு கிடைத்த மரியாதை. மனோ சீற்றம்.samugammedia இராவணன் ஒரு விபூதி தரித்த சைவத்தமிழன். அவர் ஒரு சிங்களவர் என எண்ணுபவர்களும் இருக்கிறார்கள் எனவும் அது அவரவர்கள் எண்ணம் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,எல்லாளனுடன் வந்த, தேயிலை கொழுந்து பறிக்க வந்த, சோழர்களுக்கு இந்நாட்டில் இடமில்லை என்றும், எல்லா கோவில்களும் முன்னாள் விகாரைகள் என கூறியும், மேர்வின் சில்வா “தமிழரின் தலையை கொய்வேன்” என பிதற்றுகிறார். எல்லாளன் அனுராதபுரத்தில் 44 வருடங்கள் ஆட்சி செய்தார். மக்கள் ஆதரவு இல்லாவிட்டால், இது முடியுமா ஆனால், இந்த “தலை-வெட்டியான்” கடந்த முறை அனுராதபுரத்தில்தான் போட்டியிட்டார். சிலநூறு வாக்குகளுடன் படுதோல்வி. எப்படி, எல்லாளனின் அனுராதபுரத்தில் தலை-வெட்டியானுக்கு கிடைத்த மரியாதைஅதுபோல் எதிர்கட்சி எம்பி புத்திக பத்திரன, “ராவணன் யார்” என்ற பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தாலும் வந்தார். இனி பிரேரணைகள் கொண்டு வந்தால், அவற்றை பார்த்து ஒப்புதல் அளிக்கும்படி சற்றுமுன் எதிர்க்கட்சி தலைவர் சஜித்திடம் சொன்னேன். சரியோ, பிழையோ, இவை அரசியல்வாதிகளால் பேசப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல. நாட்டில் ஒவ்வொருவருக்கும் பாரம்பரிய நம்பிக்கைகள் உண்டு.“இராவணன் ஒரு விபூதி தரித்த சைவத்தமிழன்” என நான் நம்புகிறேன். அவர் ஒரு சிங்களவர் என எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். அது அவரவர்கள் எண்ணம். ராவணன், ராமன், சீதை, ராமாயணம் எல்லாமே (Myth) கட்டுக்கதை என்று சொல்பவர்களும் உள்ளார்கள். இதெல்லாம் கருத்து சுதந்திரம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தைய சரித்திரம் பற்றி திட்டவட்டமாக அறிய முடியாது. இந்நிலையில் இன்றைய கேள்விகளுக்கு, அன்றைய சரித்திரத்தில் நுழைந்து பதில் தேடும் மூடர்கள் மத்தியில் வாழ்வதை எண்ணி வருந்துகிறேன். சக்சின், என் மகன், சொல்கிறார், “ அப்பி, ஒன்று நீங்கள் ராவணன் காலத்தில் பிறந்திருக்க வேண்டும். அல்லது இன்னமும் ஐம்பது ஆண்டுகளின் பின் பிறந்திருக்க வேண்டும்”.எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement