• May 06 2024

இலங்கை ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடர்பில் அமைச்சரின் தகவல்...! samugammedia

Chithra / Sep 29th 2023, 12:21 pm
image

Advertisement

 

கடந்த ஆண்டை விட  இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது நிலையானதாக மாறியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவின் உதவி குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டை விட நாட்டின் நிலைமை மிகவும் சிறப்பாக உள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது, ரூபாவின் பெறுமதி நிலையானதாக மாறியுள்ளது, கையிருப்பு உயர்ந்துள்ளது, சுற்றுலா துறை வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

இந்தியா 3.9 பில்லியன் மதிப்பிலான பல்வேறு உதவிகளை எங்களுக்கு வழங்கியுள்ளது. நாடு என்ற ரீதியில் இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 

இன்று நாம் அடைந்துள்ள நன்மதிப்பில் பெரும் பகுதியை இந்தியாவுக்கு சாரும் என அமைச்சர் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கை ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடர்பில் அமைச்சரின் தகவல். samugammedia  கடந்த ஆண்டை விட  இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது நிலையானதாக மாறியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவின் உதவி குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.கடந்த ஆண்டை விட நாட்டின் நிலைமை மிகவும் சிறப்பாக உள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது, ரூபாவின் பெறுமதி நிலையானதாக மாறியுள்ளது, கையிருப்பு உயர்ந்துள்ளது, சுற்றுலா துறை வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்தியா 3.9 பில்லியன் மதிப்பிலான பல்வேறு உதவிகளை எங்களுக்கு வழங்கியுள்ளது. நாடு என்ற ரீதியில் இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இன்று நாம் அடைந்துள்ள நன்மதிப்பில் பெரும் பகுதியை இந்தியாவுக்கு சாரும் என அமைச்சர் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement