• May 06 2024

மகளின் திருமணத்திற்காக பெட்டகத்தில் வைக்கப்பட்ட 18 லட்சம் பணம்- கரையான் அரித்த சோகம்!!! samugammedia

Tamil nila / Sep 29th 2023, 5:15 pm
image

Advertisement

இந்தியாவில் வங்கி லாக்கரில் வைத்திருந்த 18 லட்சம் ரூபாயை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மொராதாபாத்தை சேர்ந்தவர் அல்கா பதக்.தனது மகளின் திருமணத்திற்காக சிறுகச் சேமித்திருந்த பணத்தை வங்கியில் பத்திரப்படுத்த முடிவு செய்தார்.



இதன்படி பாங்க் ஆப் பரோடாவின் ராமகங்கா விஹார் கிளை லாக்கரில், மகள் திருமணத்துக்கான நகைகள் மற்றும் ரொக்கம் ரூ18 லட்சம் ஆகியவற்றை பத்திரப்படுத்தினார்.

அண்மையில் வங்கி மேலாளரிடமிருந்து அல்கா பதக்குக்கு அழைப்பு வந்தது. வங்கி லாக்கர் ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் மற்றும் கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறைகளுக்காக அவர் வங்கி கிளைக்கு அழைக்கப்பட்டார்.அதன்படி பாங்க் ஆப் பரோடா கிளைக்கு சென்ற அவர், வங்கி மேலாளர் அறிவுறுத்திய நடைமுறைகளை முடித்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் தனது லாக்கர் இருப்புகளை சரிபார்த்த போது அவரின் 18 லட்சம் ரூபாய்க்கான கரன்சி தாள்களை கரையான்கள் அரித்திருந்தன.இதை பார்த்த அவர் அதிர்ச்சியில் மயங்கினார்.

அல்கா பதக், வங்கி லாக்கரில் பத்திரப்படுத்திய மொத்த தொகை குறித்தும், அவற்றில் சேதத்தின் விளைவு குறித்தும் வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது.


மகளின் திருமணத்திற்காக பெட்டகத்தில் வைக்கப்பட்ட 18 லட்சம் பணம்- கரையான் அரித்த சோகம் samugammedia இந்தியாவில் வங்கி லாக்கரில் வைத்திருந்த 18 லட்சம் ரூபாயை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேசம் மொராதாபாத்தை சேர்ந்தவர் அல்கா பதக்.தனது மகளின் திருமணத்திற்காக சிறுகச் சேமித்திருந்த பணத்தை வங்கியில் பத்திரப்படுத்த முடிவு செய்தார்.இதன்படி பாங்க் ஆப் பரோடாவின் ராமகங்கா விஹார் கிளை லாக்கரில், மகள் திருமணத்துக்கான நகைகள் மற்றும் ரொக்கம் ரூ18 லட்சம் ஆகியவற்றை பத்திரப்படுத்தினார்.அண்மையில் வங்கி மேலாளரிடமிருந்து அல்கா பதக்குக்கு அழைப்பு வந்தது. வங்கி லாக்கர் ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் மற்றும் கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறைகளுக்காக அவர் வங்கி கிளைக்கு அழைக்கப்பட்டார்.அதன்படி பாங்க் ஆப் பரோடா கிளைக்கு சென்ற அவர், வங்கி மேலாளர் அறிவுறுத்திய நடைமுறைகளை முடித்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது.அதன் பின்னர் தனது லாக்கர் இருப்புகளை சரிபார்த்த போது அவரின் 18 லட்சம் ரூபாய்க்கான கரன்சி தாள்களை கரையான்கள் அரித்திருந்தன.இதை பார்த்த அவர் அதிர்ச்சியில் மயங்கினார்.அல்கா பதக், வங்கி லாக்கரில் பத்திரப்படுத்திய மொத்த தொகை குறித்தும், அவற்றில் சேதத்தின் விளைவு குறித்தும் வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement