• May 06 2024

தமிழ் திரைப்படங்களே சிறுவர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுகிறது - டயானாவின் கருத்தால் எழுந்த சர்ச்சை samugammedia

Chithra / May 29th 2023, 12:15 pm
image

Advertisement

தமிழ் திரைப்படங்கள் சிறுவர்கள் மத்தியில் வன்முறைகளை தூண்டுவதாக பாராளுமன்றத்தில் வெகுஜென ஊடக அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்தின் போது இராஜங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

அத்துடன் டயானா கமகே தனது கூற்றை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவத்தினரின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்தி பிரிவின் பிரதானிகள், அமைச்சின் அதிகாரிகள், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஊடகங்கள் பின்பற்றும் நடைமுறைகள் மற்றும் அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு கருத்து வெளியிட்ட சுற்றுலா இராஜாங்க அமைச்சர் பயாணா கமகே,

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தமிழ் திரைப்படங்கள் வன்முறைகளை தூண்டுவதாக அமைவதால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

சிங்கள தொலைக்காட்சிகளில் தமிழ் படங்களை டப் செய்து ஒளிபரப்புவதாகவும், தமிழ் படங்களில் வன்முறை, களியாட்டம் அதிகம் என்றார்.

குறிப்பாக கொலை செய்தல், வெட்டுக் குத்து காயங்கள் வெளிப்படையாக வழங்கப்படும். தண்டனைகள் ஆகிய சிறுவர்கள் மத்தியில் மாறுபட்ட சிந்தனையை தூண்டுவதாக அமர் கூறினார்.

இதன்போது குறிப்பிட்ட மனோ கணேசன் எம்பி, டயானாவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும், தமிழ் தமிழ் என கத்த வேண்டாம் என்றும், அது இங்கு வேறு அர்த்தம் தருவதாகவும், பொதுவாக இந்திய திரைப்படங்கள் என பயன்படுத்த வேண்டுமே தவிர தமிழ் திரைப்படங்கள் என இன ரீதியாக பார்க்க கூடாது என தெரிவித்தார்.

இதனால் இதுவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஏற்பட்டது. வன்முறை காட்சிகள் அனைத்து மொழி திரைப்படங்களிலும் இடம் பெறுகின்றன. தமிழ் திரைப்படங்களினாலே மக்கள் உள ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மனோ கணேசன் தெரிவித்தார்.

கூட்டத்துக்கு தலைமை தாங்கி அமைச்சர் பந்துல நிலைமையை சுமுகமாக்க முயன்றார்.

இதன் பின்னர், அனைத்து மொழி திரைப்படங்களிலும் அவ்வாறான காட்சிகள் இடம்பெறுகின்றன என்று வைத்துக் கொள்வோம். 

இந்த விடயத்தில் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டு ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்த வேண்டுமென டயானா குறிப்பிட்டார்.


தமிழ் திரைப்படங்களே சிறுவர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுகிறது - டயானாவின் கருத்தால் எழுந்த சர்ச்சை samugammedia தமிழ் திரைப்படங்கள் சிறுவர்கள் மத்தியில் வன்முறைகளை தூண்டுவதாக பாராளுமன்றத்தில் வெகுஜென ஊடக அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்தின் போது இராஜங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.அத்துடன் டயானா கமகே தனது கூற்றை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவத்தினரின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்தது.பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்தி பிரிவின் பிரதானிகள், அமைச்சின் அதிகாரிகள், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.ஊடகங்கள் பின்பற்றும் நடைமுறைகள் மற்றும் அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.இங்கு கருத்து வெளியிட்ட சுற்றுலா இராஜாங்க அமைச்சர் பயாணா கமகே,தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தமிழ் திரைப்படங்கள் வன்முறைகளை தூண்டுவதாக அமைவதால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சிங்கள தொலைக்காட்சிகளில் தமிழ் படங்களை டப் செய்து ஒளிபரப்புவதாகவும், தமிழ் படங்களில் வன்முறை, களியாட்டம் அதிகம் என்றார்.குறிப்பாக கொலை செய்தல், வெட்டுக் குத்து காயங்கள் வெளிப்படையாக வழங்கப்படும். தண்டனைகள் ஆகிய சிறுவர்கள் மத்தியில் மாறுபட்ட சிந்தனையை தூண்டுவதாக அமர் கூறினார்.இதன்போது குறிப்பிட்ட மனோ கணேசன் எம்பி, டயானாவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும், தமிழ் தமிழ் என கத்த வேண்டாம் என்றும், அது இங்கு வேறு அர்த்தம் தருவதாகவும், பொதுவாக இந்திய திரைப்படங்கள் என பயன்படுத்த வேண்டுமே தவிர தமிழ் திரைப்படங்கள் என இன ரீதியாக பார்க்க கூடாது என தெரிவித்தார்.இதனால் இதுவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஏற்பட்டது. வன்முறை காட்சிகள் அனைத்து மொழி திரைப்படங்களிலும் இடம் பெறுகின்றன. தமிழ் திரைப்படங்களினாலே மக்கள் உள ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மனோ கணேசன் தெரிவித்தார்.கூட்டத்துக்கு தலைமை தாங்கி அமைச்சர் பந்துல நிலைமையை சுமுகமாக்க முயன்றார்.இதன் பின்னர், அனைத்து மொழி திரைப்படங்களிலும் அவ்வாறான காட்சிகள் இடம்பெறுகின்றன என்று வைத்துக் கொள்வோம். இந்த விடயத்தில் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டு ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்த வேண்டுமென டயானா குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement