• May 07 2024

பொது நினைவு தூபி அமைக்கும் எண்ணப்பாடு அடிப்படையில் சரியானது..! ஆதரவு தெரிவித்த மனோ கணேசன்..!samugammedia

Sharmi / May 30th 2023, 12:09 pm
image

Advertisement

மரணித்தவர்களை நினைவு கூறுவதற்காக பொது நினைவு தூபி அமைக்கும் எண்ணப்பாடு அடிப்படையிலே சரியான ஒன்று என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சமூகம் ஊடகத்திற்கு தொலைபேசி மூலம் வழங்கிய ஒலிப்பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள தமிழ் மக்களிற்கு பொது நினைவு தூபி அமைத்தல் தொடர்பாக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.இது தொடர்பாக உங்கள் கருத்து யாது? என எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,

அவர் பதிலளிக்கையில்,

மரணித்தவர்களை நினைவு கூறுவதற்காக பொது தூபி அமைக்கும் எண்ணப்பாடு அடிப்படையிலே சரியான ஒன்றே. ஆனால் இலங்கை வரலாற்றில்  கொல்லப்பட்டவர்களுக்கும் , கொன்றவர்களும் வெவ்வேறாக அடையாளம் காணப்படுகின்றது.

அதனுள்ளும் கொல்லப்பட்ட போராளிகளை தமிழர்கள் விடுதலை வீரர்களாகவும் அரசாங்கத்தையும் பிக்குக்களையும் பயங்கரவாதிகளாவும் மற்றும் போர்புரிந்த இராணுவ வீரர்களை வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் அரச பயங்கரவாதிகளாகவும்  கருதுகின்றனர்.

இரண்டு தரப்பினதும் போரிற்கு மத்தியிலே வன்முறை நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் நாடு முழுவதுமுள்ளனர்.

அத்துடன், தீராத இனப்பிரச்சினை காரணமாக இனக்கலவரங்களால் கொல்லப்பட்ட மக்களும் கணிசமாக உள்ளனர்.

1958 ,1961, 1962 , 1977 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாரிய இனக்கலவரம் காரணமாக தென் இலங்கையில் வாழ்ந்த  தமிழர்கள் மலையகத்திலும் தென் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மற்றும் கொழும்பிலும் கூட கொல்லப்பட்டனர்.

அத்துடன் இந்தக்கலவரத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம் மக்களும் இருக்கின்றனர்.ஆகவே அதில் இலங்கையினை சேர்ந்த அனைத்து இனத்தவரும் , மதத்தவரும் அத்துடன் மொழியினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி இலங்கையர் அல்லாத வெளிநாட்டு பிரஜைகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பின்னணியை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இவற்றினை நினைவு கூறுதல் தொடர்பான செயற்பாட்டு சிந்தனையினை ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக அனைவருக்குமான நினைவு தூபியினை நிர்மாணித்து அதனை மரணித்தவர்களிற்காக அனைவரும் நினைவு கூறும் ஒன்றாக கருதும் நிலையில் நாடு இல்லை. அதனை முற்போக்காக நான் கருதுகின்றேன். அது முழுமையானதல்ல.

கொல்லப்பட்டவர்களில் அப்பாவி மக்கள், போராளிகள் மற்றும் இராணுவ வீரர்கள் என பலர் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொரு காரணங்களால் மரணம் ஏற்பட்டுள்ளது.

போராளிகளும் இராணுவ வீரர்களும் போர் செய்வதற்கும் வீர மரணம் அடைவதற்கும்  என்றுமே போராடினார்கள்.

ஆனால் அப்பாவி பொதுமக்கள் அவற்றிற்கிடையில் சிக்கி கொல்லப்பட்டனர். இவ்வாறாக மரணங்களில் வேறு வேறு காரணங்கள் இருப்பினும் அவர்கள் அடிப்படையில் மரணித்துள்ளனர். இவற்றினை மனதிலே கொண்டு பரந்த சிந்தனையுடன் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

பொது நினைவு தூபி அமைக்கும் எண்ணப்பாடு அடிப்படையில் சரியானது. ஆதரவு தெரிவித்த மனோ கணேசன்.samugammedia மரணித்தவர்களை நினைவு கூறுவதற்காக பொது நினைவு தூபி அமைக்கும் எண்ணப்பாடு அடிப்படையிலே சரியான ஒன்று என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் சமூகம் ஊடகத்திற்கு தொலைபேசி மூலம் வழங்கிய ஒலிப்பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள தமிழ் மக்களிற்கு பொது நினைவு தூபி அமைத்தல் தொடர்பாக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.இது தொடர்பாக உங்கள் கருத்து யாது என எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், மரணித்தவர்களை நினைவு கூறுவதற்காக பொது தூபி அமைக்கும் எண்ணப்பாடு அடிப்படையிலே சரியான ஒன்றே. ஆனால் இலங்கை வரலாற்றில்  கொல்லப்பட்டவர்களுக்கும் , கொன்றவர்களும் வெவ்வேறாக அடையாளம் காணப்படுகின்றது. அதனுள்ளும் கொல்லப்பட்ட போராளிகளை தமிழர்கள் விடுதலை வீரர்களாகவும் அரசாங்கத்தையும் பிக்குக்களையும் பயங்கரவாதிகளாவும் மற்றும் போர்புரிந்த இராணுவ வீரர்களை வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் அரச பயங்கரவாதிகளாகவும்  கருதுகின்றனர். இரண்டு தரப்பினதும் போரிற்கு மத்தியிலே வன்முறை நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் நாடு முழுவதுமுள்ளனர். அத்துடன், தீராத இனப்பிரச்சினை காரணமாக இனக்கலவரங்களால் கொல்லப்பட்ட மக்களும் கணிசமாக உள்ளனர். 1958 ,1961, 1962 , 1977 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாரிய இனக்கலவரம் காரணமாக தென் இலங்கையில் வாழ்ந்த  தமிழர்கள் மலையகத்திலும் தென் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மற்றும் கொழும்பிலும் கூட கொல்லப்பட்டனர். அத்துடன் இந்தக்கலவரத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம் மக்களும் இருக்கின்றனர்.ஆகவே அதில் இலங்கையினை சேர்ந்த அனைத்து இனத்தவரும் , மதத்தவரும் அத்துடன் மொழியினரும் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி இலங்கையர் அல்லாத வெளிநாட்டு பிரஜைகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பின்னணியை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவற்றினை நினைவு கூறுதல் தொடர்பான செயற்பாட்டு சிந்தனையினை ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக அனைவருக்குமான நினைவு தூபியினை நிர்மாணித்து அதனை மரணித்தவர்களிற்காக அனைவரும் நினைவு கூறும் ஒன்றாக கருதும் நிலையில் நாடு இல்லை. அதனை முற்போக்காக நான் கருதுகின்றேன். அது முழுமையானதல்ல. கொல்லப்பட்டவர்களில் அப்பாவி மக்கள், போராளிகள் மற்றும் இராணுவ வீரர்கள் என பலர் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொரு காரணங்களால் மரணம் ஏற்பட்டுள்ளது. போராளிகளும் இராணுவ வீரர்களும் போர் செய்வதற்கும் வீர மரணம் அடைவதற்கும்  என்றுமே போராடினார்கள். ஆனால் அப்பாவி பொதுமக்கள் அவற்றிற்கிடையில் சிக்கி கொல்லப்பட்டனர். இவ்வாறாக மரணங்களில் வேறு வேறு காரணங்கள் இருப்பினும் அவர்கள் அடிப்படையில் மரணித்துள்ளனர். இவற்றினை மனதிலே கொண்டு பரந்த சிந்தனையுடன் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement