• May 05 2024

சோரம் போகின்ற தமிழ்த் தலைமைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்! கிராமிய உழைப்பாளர் சங்கம்

Chithra / Jan 16th 2023, 2:16 pm
image

Advertisement

அரசின் சூழ்ச்சிகளுக்கு சோரம் போகின்ற மதகுருமார்களாக இருந்தாலும் சரி அரசியல் தலைமைகளாக இருந்தாலும் சரி அவர்களை பயன்படுத்தி ஒவ்வொரு காரியத்தையும் கனகச்சிதமாக நடாத்தி முடித்துக்கொண்டு செல்கின்றனர் என கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் N.இன்பநாயகம் தெரிவித்தார்.

தேசிய பொங்கல் தினம் நேற்றையதினம் யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், போராட்டகாரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகங்கள் மூலமாக போராட்டகாரர்களை முன்னேறவிடாது தடுத்தனர்.

இந்நிலையில் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் N.இன்பநாயகம்,

போராட்டத்தின் விளைவாக  பாரியதொரு சவாலுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்தப் போராட்டம் எமது கவனத்தை திசை திருப்பியிருக்கின்றது. போராட்டத்திற்கான ஒரு பெறுமதியை ஏற்படுத்தியிருக்கின்றது. 

ஏனென்றால் போராட்டக்களத்தில் நடந்து கொண்ட விதம், பெண் சகோதரிகள் அவர்களுக்கு வழங்கிய பதிலடி போன்றன வலுச்சேர்த்துள்ளது. 

நாம் தேசிய பொங்கல் விழா நடைபெறும் இடம்வரை நகர்த்த முடியாவிட்டாலும் பெரியதொரு கவனத்தை ஏற்படு்த்தியுள்ளது.

எமது தேசத்திலே இனவாதிகள் எமது தலைமைகளின் ஆதரவைப் பயன்படுத்தி அவர்கள் தங்களது  காரியங்களை கடந்த காலத்திலிருந்து இந்த நிமிடம் வரை வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

அரசியல் சூழ்ச்சிகளுக்கு சோரம் போகின்ற மதகுருமார்களாக இருந்தாலும் சரி அரசியல் தலைமைகளாக இருந்தாலும் சரி  அவர்களை பயன்படுத்தி ஒவ்வொரு காரியத்தையும் கனகச்சிதமாக நடாத்தி முடித்துக்கொண்டு செல்கின்றனர்.  

நாம் அரசாங்கத்திற்கு எதிராகப் பாராடுகின்ற அதேவேளை, சோரம் போகின்ற தமிழ்த் தலைமைகளையும்  நிராகரிக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.  

ஏனென்றால் இந்தத் தலைமைகள்  எங்களுடைய மக்களை விற்றுப் பிழைத்துக்கொண்டிருப்பார்கள் என்பது வரலாற்று ரீதியாக கண்ட அனுபவம். இந்த சம்பவமும் அதை நினைவுபடுத்தி நிற்கின்றது. 

கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போராட்டத்திற்காக பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகமளிக்காத நிலை காணப்படுகின்றது. 

இதேவேளை அனைத்து மதகுருமார்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் வேலன் சுவாமி ஐயா மட்டுமே கலந்து கொண்டிருந்தார். 

ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும் சிவில் சமூகசெயற்பாட்டாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.- என்றார்.

சோரம் போகின்ற தமிழ்த் தலைமைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் கிராமிய உழைப்பாளர் சங்கம் அரசின் சூழ்ச்சிகளுக்கு சோரம் போகின்ற மதகுருமார்களாக இருந்தாலும் சரி அரசியல் தலைமைகளாக இருந்தாலும் சரி அவர்களை பயன்படுத்தி ஒவ்வொரு காரியத்தையும் கனகச்சிதமாக நடாத்தி முடித்துக்கொண்டு செல்கின்றனர் என கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் N.இன்பநாயகம் தெரிவித்தார்.தேசிய பொங்கல் தினம் நேற்றையதினம் யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், போராட்டகாரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகங்கள் மூலமாக போராட்டகாரர்களை முன்னேறவிடாது தடுத்தனர்.இந்நிலையில் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் N.இன்பநாயகம்,போராட்டத்தின் விளைவாக  பாரியதொரு சவாலுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்தப் போராட்டம் எமது கவனத்தை திசை திருப்பியிருக்கின்றது. போராட்டத்திற்கான ஒரு பெறுமதியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனென்றால் போராட்டக்களத்தில் நடந்து கொண்ட விதம், பெண் சகோதரிகள் அவர்களுக்கு வழங்கிய பதிலடி போன்றன வலுச்சேர்த்துள்ளது. நாம் தேசிய பொங்கல் விழா நடைபெறும் இடம்வரை நகர்த்த முடியாவிட்டாலும் பெரியதொரு கவனத்தை ஏற்படு்த்தியுள்ளது.எமது தேசத்திலே இனவாதிகள் எமது தலைமைகளின் ஆதரவைப் பயன்படுத்தி அவர்கள் தங்களது  காரியங்களை கடந்த காலத்திலிருந்து இந்த நிமிடம் வரை வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.அரசியல் சூழ்ச்சிகளுக்கு சோரம் போகின்ற மதகுருமார்களாக இருந்தாலும் சரி அரசியல் தலைமைகளாக இருந்தாலும் சரி  அவர்களை பயன்படுத்தி ஒவ்வொரு காரியத்தையும் கனகச்சிதமாக நடாத்தி முடித்துக்கொண்டு செல்கின்றனர்.  நாம் அரசாங்கத்திற்கு எதிராகப் பாராடுகின்ற அதேவேளை, சோரம் போகின்ற தமிழ்த் தலைமைகளையும்  நிராகரிக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.  ஏனென்றால் இந்தத் தலைமைகள்  எங்களுடைய மக்களை விற்றுப் பிழைத்துக்கொண்டிருப்பார்கள் என்பது வரலாற்று ரீதியாக கண்ட அனுபவம். இந்த சம்பவமும் அதை நினைவுபடுத்தி நிற்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போராட்டத்திற்காக பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகமளிக்காத நிலை காணப்படுகின்றது. இதேவேளை அனைத்து மதகுருமார்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் வேலன் சுவாமி ஐயா மட்டுமே கலந்து கொண்டிருந்தார். ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும் சிவில் சமூகசெயற்பாட்டாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement