• May 06 2024

50 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கப்பட்ட பிரச்சினை; கச்சதீவு குறித்து வெளிவிவகார அமைச்சரின் அறறிவிப்பு

Chithra / Apr 4th 2024, 3:33 pm
image

Advertisement


 

ஐம்பது வருடங்களிற்கு முன்னர் இந்தியா கையளித்த சர்ச்சைக்குரிய கச்சதீவு குறித்து புதிய பேச்சுவார்த்தைகள் எவற்றையும் ஆரம்பிக்கவேண்டிய தேவை உள்ளதாக இலங்கை கருதவில்லை  என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் களத்தில் கச்சதீவு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

1976ம் ஆண்டு இரண்டு அயல்நாடுகளும் கச்சதீவு குறித்து செய்துகொண்ட உடன்படிக்கையை தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படும் நரேந்திர மோடி தேர்தல் விவகாரமாக்கியுள்ளார்.

இந்த பிரச்சினை ஐம்பது வருடங்களிற்கு முன்னரே பேசப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீண்டும் இது குறித்து பேசவேண்டிய அவசியமில்லை என அலிசப்ரி  தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய நிலையேற்படும் என  நான் கருதவில்லை என தெரிவித்துள்ள அவர் கச்சதீவின் தற்போதைய நிலையில் மாற்றங்கள் வேண்டும் என எவரும் இதுவரை வேண்டுகோள் விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கப்பட்ட பிரச்சினை; கச்சதீவு குறித்து வெளிவிவகார அமைச்சரின் அறறிவிப்பு  ஐம்பது வருடங்களிற்கு முன்னர் இந்தியா கையளித்த சர்ச்சைக்குரிய கச்சதீவு குறித்து புதிய பேச்சுவார்த்தைகள் எவற்றையும் ஆரம்பிக்கவேண்டிய தேவை உள்ளதாக இலங்கை கருதவில்லை  என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்திய தேர்தல் களத்தில் கச்சதீவு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.1976ம் ஆண்டு இரண்டு அயல்நாடுகளும் கச்சதீவு குறித்து செய்துகொண்ட உடன்படிக்கையை தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படும் நரேந்திர மோடி தேர்தல் விவகாரமாக்கியுள்ளார்.இந்த பிரச்சினை ஐம்பது வருடங்களிற்கு முன்னரே பேசப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.இதன் காரணமாக மீண்டும் இது குறித்து பேசவேண்டிய அவசியமில்லை என அலிசப்ரி  தெரிவித்துள்ளார்.பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய நிலையேற்படும் என  நான் கருதவில்லை என தெரிவித்துள்ள அவர் கச்சதீவின் தற்போதைய நிலையில் மாற்றங்கள் வேண்டும் என எவரும் இதுவரை வேண்டுகோள் விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement