• May 07 2024

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிட்டு எந்த பயனும் இல்லை - பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு..!samugammedia

Tharun / Nov 22nd 2023, 7:25 pm
image

Advertisement

நானும் சட்டதரணி சுகாஸும்   சட்டரீதியற்ற முறையில் கைது செய்யப்பட்டோம். மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று  முறையிட்ட போதும் எந்த பயனும் இல்லையென இன்றைய பாராளுமன்ற  அமர்வில்  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

வடக்கு கிழக்கு மக்கள் தினமும் அடக்குமுறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்புக்களை காட்டி கொண்டு வருகிறார்கள். நாங்கள் யாரிடம் நீதியை எதிர்பாக்கிறோமோ அவர்களே அதை மீறுகிறார்கள். இதனால் நாங்கள் நம்பிக்கை இழந்துள்ளோம். நாங்கள் யாரிடம் செல்வது என்பது பற்றி தெரியாமல் இருக்கிறது. எனவே நாங்கள் மனித உரிமை ஆணைக்குழுவைத்தான் தெரிவு செய்ய வேண்டி இருக்கிறது.  எனவே ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டுமென நாங்கள் எதிர்பாக்கிறோம். 

மனித உரிமை ஆணைக்குழு நடுநிலையாகவும் நம்பகத்தன்மை உடையதாகவும் செயற்பட வேண்டும். எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் ஒரு  சட்டவிரோத விகாரை  எதிர்ப்பு சம்பந்தமாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்கள். அத்துடன் பொதுமக்கள் கைது செய்யப்பட்டார்கள். சட்டத்தரணி ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் நாங்கள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று முறையிட்டோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. 

நானும் சட்டரீதியற்ற முறையில் கைது செய்யப்பட்டேன். நானும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிட்டேன். இதுவரை எதுவும் இடம்பெறவில்லை. மேலும் பல சம்பவங்கள் உள்ளன. தேசிய ரீதியில் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறான முறையில்  நடத்தப்படும் போது, ஆணைக்குழு இது சம்பந்தமாக விசாரிக்காமல் விடும் போது, அவர்களின் நோக்கம் என்ன? சுயாதீனத்தன்மை எவ்வாறு அமைகிறது? 

இலங்கை ஏற்கனவே நகைப்புக்குள்ளாகியுள்ளது. ஐ.நா. மனித ஆணைகுழுவில் அறிக்கை மேல் அறிக்கை காணப்படுகிறது. இதில் ஊழல் இருப்பதாகவும், சுயாதீன விசாரணை நடத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மனித உரிமை ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படாவிட்டால் தமிழ் மக்கள் நீதியை இந்நாட்டில் எதிர்பார்க்க முடியாது. என மேலும் தெரிவித்துள்ளார். 

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிட்டு எந்த பயனும் இல்லை - பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு.samugammedia நானும் சட்டதரணி சுகாஸும்   சட்டரீதியற்ற முறையில் கைது செய்யப்பட்டோம். மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று  முறையிட்ட போதும் எந்த பயனும் இல்லையென இன்றைய பாராளுமன்ற  அமர்வில்  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்வடக்கு கிழக்கு மக்கள் தினமும் அடக்குமுறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்புக்களை காட்டி கொண்டு வருகிறார்கள். நாங்கள் யாரிடம் நீதியை எதிர்பாக்கிறோமோ அவர்களே அதை மீறுகிறார்கள். இதனால் நாங்கள் நம்பிக்கை இழந்துள்ளோம். நாங்கள் யாரிடம் செல்வது என்பது பற்றி தெரியாமல் இருக்கிறது. எனவே நாங்கள் மனித உரிமை ஆணைக்குழுவைத்தான் தெரிவு செய்ய வேண்டி இருக்கிறது.  எனவே ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டுமென நாங்கள் எதிர்பாக்கிறோம். மனித உரிமை ஆணைக்குழு நடுநிலையாகவும் நம்பகத்தன்மை உடையதாகவும் செயற்பட வேண்டும். எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் ஒரு  சட்டவிரோத விகாரை  எதிர்ப்பு சம்பந்தமாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்கள். அத்துடன் பொதுமக்கள் கைது செய்யப்பட்டார்கள். சட்டத்தரணி ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் நாங்கள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று முறையிட்டோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. நானும் சட்டரீதியற்ற முறையில் கைது செய்யப்பட்டேன். நானும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிட்டேன். இதுவரை எதுவும் இடம்பெறவில்லை. மேலும் பல சம்பவங்கள் உள்ளன. தேசிய ரீதியில் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறான முறையில்  நடத்தப்படும் போது, ஆணைக்குழு இது சம்பந்தமாக விசாரிக்காமல் விடும் போது, அவர்களின் நோக்கம் என்ன சுயாதீனத்தன்மை எவ்வாறு அமைகிறது இலங்கை ஏற்கனவே நகைப்புக்குள்ளாகியுள்ளது. ஐ.நா. மனித ஆணைகுழுவில் அறிக்கை மேல் அறிக்கை காணப்படுகிறது. இதில் ஊழல் இருப்பதாகவும், சுயாதீன விசாரணை நடத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மனித உரிமை ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படாவிட்டால் தமிழ் மக்கள் நீதியை இந்நாட்டில் எதிர்பார்க்க முடியாது. என மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement