• Jan 17 2025

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு - இருவர் மரணம்; இருவர் காயம்

Chithra / Jan 16th 2025, 10:50 am
image



மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தவர்களே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

மன்னார் நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.


மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு - இருவர் மரணம்; இருவர் காயம் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தவர்களே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.மன்னார் நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement