• Nov 25 2024

உக்ரைன் – ரஷ்ய போர் : இலங்கை வீரர்களை மீட்க ரஷ்ய செல்லும் பிரதிநிதிகள்!

Tamil nila / May 30th 2024, 7:18 pm
image

ரஷ்ய – உக்ரைன் போரில் ஈடுபட்ட முன்னாள் இலங்கை ராணுவ வீரர்கள் குறித்து விவாதிக்க இலங்கை பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்  தாரக பாலசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி ஜூன் 5-7 ஆம் திகதிகளுக்கு இடையில் நாட்டின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ரஷ்ய உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியதாகவும், அந்த இலக்கத்திற்கு இதுவரை 455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி 16 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 26 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்


உக்ரைன் – ரஷ்ய போர் : இலங்கை வீரர்களை மீட்க ரஷ்ய செல்லும் பிரதிநிதிகள் ரஷ்ய – உக்ரைன் போரில் ஈடுபட்ட முன்னாள் இலங்கை ராணுவ வீரர்கள் குறித்து விவாதிக்க இலங்கை பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளது.ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்  தாரக பாலசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்படி ஜூன் 5-7 ஆம் திகதிகளுக்கு இடையில் நாட்டின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.ரஷ்ய உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியதாகவும், அந்த இலக்கத்திற்கு இதுவரை 455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதுவரை கிடைத்த தகவல்களின்படி 16 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 26 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement