• May 06 2024

இலங்கைக்கு வரவிருந்த பெருமளவு கடல் அட்டைகள்..! தமிழகத்தில் சிக்கியது! samugammedia

Sharmi / Mar 30th 2023, 2:06 pm
image

Advertisement

இலங்கை கடத்த இருந்த 256 கிலோ கடல் அட்டை க்யூப் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வேதாளை கடற்கரை அருகே ஒரு தோப்பில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலிற்கு அமைவாக அந்த பகுதிக்கு சென்று கியு பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் சுமார் 256 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்து  க்யூப் பிரிவு போலீசார் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிடிப்பட்ட கடல் அட்டை சர்வதேச மதிப்பு சுமார் பத்து லட்சத்துக்கு மேல் இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இலங்கைக்கு வரவிருந்த பெருமளவு கடல் அட்டைகள். தமிழகத்தில் சிக்கியது samugammedia இலங்கை கடத்த இருந்த 256 கிலோ கடல் அட்டை க்யூப் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வேதாளை கடற்கரை அருகே ஒரு தோப்பில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த தகவலிற்கு அமைவாக அந்த பகுதிக்கு சென்று கியு பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் சுமார் 256 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிடிபட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்து  க்யூப் பிரிவு போலீசார் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.பிடிப்பட்ட கடல் அட்டை சர்வதேச மதிப்பு சுமார் பத்து லட்சத்துக்கு மேல் இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement