• May 07 2024

மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்த 104 பேரும் யாழ். சிறைக்கு மாற்றம்!

Chithra / Dec 20th 2022, 6:36 am
image

Advertisement


யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் நேற்று (19) இரவு  யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்  இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக  பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் டிசம்பர் 17ம் திகதி  இலங்கை  கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு  டிசம்பர் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம்  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே 104 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.


மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்த 104 பேரும் யாழ். சிறைக்கு மாற்றம் யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் நேற்று (19) இரவு  யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்  இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக  பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.இவ்வாறு தத்தளித்தவர்கள் டிசம்பர் 17ம் திகதி  இலங்கை  கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு  டிசம்பர் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம்  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.இந்நிலையிலேயே 104 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement