• May 05 2024

வடக்கு உட்பட அனைத்து தொகுதியிலும் கூட்டணி – தொலைபேசியுடன் இணையும் ரிசாட்!

Chithra / Jan 10th 2023, 10:17 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஜக்கிய மக்கள் சக்தியுடனும் இணைந்து போட்டியிடவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன் தம்மால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள்  ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏற்றுக்கொள்பட்டால், புரிந்துணர்வோடும், இணைக்கப்பட்டோடும் சில மாவட்டங்களில் அவர்களோடு இணைந்து தேர்தலில் போட்டியிட தயார் என்று ரிசாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் பங்காளிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பங்காளிக் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


வடக்கு உட்பட அனைத்து தொகுதியிலும் கூட்டணி – தொலைபேசியுடன் இணையும் ரிசாட் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஜக்கிய மக்கள் சக்தியுடனும் இணைந்து போட்டியிடவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.அத்துடன் தம்மால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள்  ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏற்றுக்கொள்பட்டால், புரிந்துணர்வோடும், இணைக்கப்பட்டோடும் சில மாவட்டங்களில் அவர்களோடு இணைந்து தேர்தலில் போட்டியிட தயார் என்று ரிசாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் பங்காளிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பங்காளிக் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement