• May 07 2024

நாட்டில் அரிசி விலைகளில் மாற்றம்? SamugamMedia

Chithra / Mar 1st 2023, 9:46 am
image

Advertisement

நாட்டின் அரிசி விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரிசியின் விலைகள் குறிப்பிடத்தக்களவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நெல் கொள்வனவு செய்யும் போது விதிக்கப்படும் சமூகப் பாதுகாப்பு வரி நீக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் நெல் கொள்வனவின் போது 2.5 வீதம் சமூகப் பாதுகாப்பு வரி அறவீடு செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய இந்த வரி நீக்கப்பட்டுள்ளது.

இந்த வரி நீக்கத்தின் அடிப்படையில் சந்தையில் அரிசி விலையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விவசாயிகளுக்கு நெல்லுக்கான கூடுதல் விலையையும், நுகர்வோருக்கு அரிசிக்கான குறைந்த விலையையும் உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 


நாட்டில் அரிசி விலைகளில் மாற்றம் SamugamMedia நாட்டின் அரிசி விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அரிசியின் விலைகள் குறிப்பிடத்தக்களவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நெல் கொள்வனவு செய்யும் போது விதிக்கப்படும் சமூகப் பாதுகாப்பு வரி நீக்கப்பட்டுள்ளது.இதுவரை காலமும் நெல் கொள்வனவின் போது 2.5 வீதம் சமூகப் பாதுகாப்பு வரி அறவீடு செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய இந்த வரி நீக்கப்பட்டுள்ளது.இந்த வரி நீக்கத்தின் அடிப்படையில் சந்தையில் அரிசி விலையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.விவசாயிகளுக்கு நெல்லுக்கான கூடுதல் விலையையும், நுகர்வோருக்கு அரிசிக்கான குறைந்த விலையையும் உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement